விவேகம் திரைப்படத்தை பார்த்தபோது மயங்கி விழுந்து இறந்த ரசிகர்.. காரைக்கால் தியேட்டரில் சோகம்
சென்னை: தியேட்டரில் விவேகம் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த வாலிபர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் காரைக்கால் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கிளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சபுருதீன் (31). திருமணமாகி 4 வருடங்கள்தான் ஆகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வந்த அவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அஜித் நடித்த விவேகம் திரைப்படம் ரிலீசான நிலையில், நண்பர்களோடு நேற்று படம் பார்க்க காரைக்காலிலுள்ள தியேட்டருக்கு சென்றார்.
படம் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. சுருண்டு விழுந்த அவரை நண்பர்கள் உடனடியாக மருத்துவமனை தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவத்தால் தியேட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சபுருதீன் மனைவி ஆலம் முனிராபேகம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications