அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து டி.எஸ்.பி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் அரக்கோணம் கம்மவார் தெருவை சேர்ந்த கோகுல் (வயது 28) என்பவர் நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டி தப்பி சென்றதாக நகர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்தவர் யார் கொலை செய்தவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டபகலில் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவத்தால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர். இது குறித்து அரக்கோணம் டி.எஸ்.பி மனோகரன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications