முன்னாள் காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய வாலிபர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அத்திரமரப்பட்டியை சேர்ந்தவர் பிரவீன். அவர் முத்தையாபுரத்தில் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். அவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அந்த பெண்ணுக்கு தூத்துக்குடியை சேர்ந்த வேறு ஒருவருடன் நிச்சியதார்த்தம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன் அவருடைய திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டமிட்டார். இதற்காக அவர் தனது காதலியின் புகைப்படத்தை வேறு ஒரு பெண்ணின் ஆபாச படத்தின் மூலம் திருத்தி அந்த ஆபாச படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் வீட்டார் பிரவீனை தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பிரவீன் அந்த பெண் வீட்டாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர்கள் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி பிரவீனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications