குடிகாரர்களிடம் கவனமாக டீல் பண்ண வேண்டும்.. போலீஸுக்கு வந்த இக்கட்டான நிலையை பாருங்க!
போலீசை மிரட்டிய இளைஞர் கூவம் ஆற்றில் விழுந்தார்.
Recommended Video

சென்னை: குடிகாரர்களிடம் ரொம்ப கவனமாக டீல் செய்ய வேண்டும் என்பதை சென்னை காவல்துறைக்கு ஒரு குடிகாரர் "டெமோ" செய்து காட்டி அதிர வைத்துள்ளார்.
அடையாறு கூவம் அருகே நேற்றிரவு வழக்கம்போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் என்பவர் பைக்கில் அந்த பக்கம் வேகமாக வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர்.

சாவியை எடுத்த போலீஸ்
பின்னர் அவரிடம், விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். கூடவே மது வாடையும் வந்திருக்கிறது. அதனையும் சோதனை செய்து போலீசார் உறுதிப்படுத்தி கொண்டனர். தண்ணி அடித்துவிட்டு பைக் ஓட்டிவந்ததால், பைக்கில் இருந்த சாவியை போலீசார் எடுத்து கொண்டனர். இதனால் ஆத்திரமுற்ற ராதாகிருஷ்ணன் சாவியை தருமாறு தகராறு செய்தார்.

கூவத்தில் விழுந்தார்
போதையில் கன்னாபின்னாவென்று போலீசாரை பேசினார். அப்போதும் சாவி தரப்படவில்லை. சாவியை கொடுக்காவிட்டால் கூவத்தில் விழுந்துவிடுவேன் என்று மிரட்டினார். அப்போதும் சாவி தரப்படவில்லை. அப்போது போலீஸார் எதிர்பார்க்காதபோது, ராதாகிருஷ்ணன் கூவம் ஆற்றில் திடீரென்று ஓடிப்போய் விழுந்துவிட்டார்.

தீயணைப்பு வீரர்கள்
இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத போலீசார் பதறி போய்விட்டனர். திரும்ப எழுந்து வருகிறாரா என்று பார்த்துக் கொண்டே இருந்தனர். ஆனால் ராதாகிருஷ்ணன் வரவேயில்லை. இதனால் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றது.

ராதாகிருஷ்ணன் வருவாரா?
விடிய விடிய நடந்தும் ராதாகிருஷ்ணன் வரவே இல்லை. இதில் உறவினர்களும் அப்பகுதிக்கு வந்துவிட்டதால் இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராதாகிருஷ்ணன் கூவத்திலிருந்து மீண்டு வருவாரா?
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications