ஒரு பெண்.. இரண்டு நண்பர்கள்.. உல்லாசம்.. மிரட்டல்.. கடைசியில் கொலை!
தர்மபுரி: ஒரே பெண்ணுடன் இரண்டு நண்பர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒருவர் உல்லாசமாக இருந்ததை இன்னொருவர் மொபைல் போனில் படம் எடுத்துள்ளார். பின்னர் அதைக் காட்டி தனது நண்பரை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த அந்த நபர், தனது நண்பரைக் கொலை செய்து விட்டார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில் இந்த கொடுமை நடந்துள்ளது.
அனுமன்தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவரது நண்பர் பெயர் அனுபமணி. இவர் பாப்பிரெட்டி பட்டி பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் "முஸ்தபா முஸ்தபா டோன்ட் ஒர்ரி முஸ்தபா" ரேஞ்சுக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளன்ர்.
இருவருக்கும் பெண்களுடன் பழக்கமும் இருந்துள்ளது. சமீபத்தில் இருவரும் ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துள்ளனர். அப்போது அன்புமணி உல்லாசமாக இருந்தபோது அதை கோபிநாத் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அதன் பின்னர் சில நாட்களுக்கு முன்பு எனக்கு புது போன் வேண்டும், ரூ. 60,00 கொடு என்று கேட்டுள்ளார் கோபிநாத். அவ்வளவு பணம் கிடையாது என்று அன்புமணி கூறியுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் நெட்டில் போட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார் கோபிநாத். இதை எதிர்பார்க்கவில்லை அன்புமணி. இதனால் கோபிநாத் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மறுபடியும் கடந்த 26ம் தேதி ரூ. 20,000 கேட்டுள்ளார் கோபிநாத். இதனால் கோபமாகிப் போன அன்புமணி, கோபிநாத்தைப் போட்டுத் தள்ளமுடிவெடுத்தார். நைஸாகப் பேசி கோபிநாத்தை தனது வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார்.
கோபிநாத்தும் தனது நண்பரான விமல் என்பவருடன் அன்புமணி வீ்ட்டுக்குப் போனார். அங்கு ஏற்கனவே காத்திருந்த அன்புமணி குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து தயாராக வைத்திருந்தார். கோபிநாத்தும், விமலும் வந்ததும் அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார். குடித்த இருவரும் மயங்கி விழுந்தனர்.
அதன் பின்னர் பெரிய உருட்டுக் கட்டையை எடுத்து இருவரையும் சரமாரியாக அடித்து வெளுத்தார். இதில் கோபிநாத் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். பின்னர் கோபிநாத்தையும், விமலையும் அருகில் உள்ள தோட்டத்திற்குக் கொண்டு போய் போட்டார் அன்புமணி. பின்னர் தனது அப்பா மற்றும் உறவினர் ஜானகி ஆகியோரிடம்தகவல் தெரிவித்தார்.
அவர்கள் வீட்டுக்கு ஓடி வந்தனர். வீட்டில் இருந்த ரத்தக் கரையை கழுவித் துடைத்தனர். இந்த நிலையில் விமல் தோட்டத்தில் உயிருக்குப் போராடினார். கத்திக் கூச்சல் போட்டு உதவி கேட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸுக்குப் போன் மூலம் தகவல் தெரிவிக்க போலீஸார் வந்து அவரை மீட்டனர். கோபிநாத்தின் உடலையும் மீட்டனர்.
விசாரணையில் அன்புமணி குறித்து தகவல் தெரியவே அன்புமணி உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications