15 வயது சிறுமியை கடத்தி சீரழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
கரூர்: கரூரில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பெரியமஞ்சு வழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (27). இவர் இப்பகுதியில் கூலி தொழில் புரிந்து வருகிறார். இதே பகுதியை சார்ந்த சுனிதா (பெயர் மாற்றப்பட்டது) என்பவரை கடந்த 2011 ம் வருடம் (அப்போது அவருக்கு வயது 15), அரசு உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளி செல்வதற்காக பேருந்திற்காக பஸ் ஸ்டாப்பில் காத்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஜெயக்குமார் சுனிதாவை கடத்தி கொண்டு போய் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் உள்ள முருகன் கோயிலில் வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார். பின்பு சென்னை அழைத்து சென்று குடும்பம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் சுனிதாவின் தந்தை கிருஷ்ணசாமி அரவக்குறிச்சி போலீஸில் புகார் செய்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட அரவக்குறிச்சி போலீஸார் சென்னையில் பதுங்கியிருந்த ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி எம்.குணசேகரன் ஜெயக்குமாருக்கு ஆள்கடத்தல் பிரிவுக்கு பத்தாண்டு சிறை தண்டனையும் ரூ ஆயிரம் அபராதமும், மேலும் பாலியல் தொல்லை செய்ததற்காக பத்தாண்டு சிறை தண்டனையும், ரூ ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனை சிறுமிகளை கடத்தி கொண்டு போய் பாலீயல் தொந்தரவு கொடுக்கும் வாலிபர்களுக்கு முன்னுதராணமாக விளங்கி உள்ளது பெண்கள் சங்கத்தினர் கருத்து தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications