அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கு... இது தியாகத் தலைமுறை: தீக்குளித்தவரின் உருக்கமான கடிதம்
அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி தீக்குளித்த ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த மகேஸ்வரன் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.
திருப்பூர்: ஆதித் தமிழர் பேரவையின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவராக இருந்த மகேஸ்வரன் நேற்று நள்ளிரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதியுள்ள உருக்கமான கடிதம் தற்போது கிடைத்துள்ளது. சிறிய துண்டுச் சீட்டில் "மகேஸ்வரன் ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் திருப்பூர் என்று அவரது முகவரியை மகேஸ்வரன் எழுதியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த துண்டு சீட்டில் "தமிழக அரசே! அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்தி வழங்கு!" என்று எழுதி கையொப்பமிட்டு தேதி இரவு 12 மணி என்பதை குறிப்பிட்டுள்ளார்.

உருக்கமான கடிதம்
மேலும், "இறப்புகள் தொடரலாம் இலக்கை அடையும் வரை உள்இட ஒதுக்கீட்டை விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தி பெற்றே தீருவோம். ஆம்! இது தியாகத் தலைமுறைதான்!" என்று எழுதி அங்கும் தனது கையொப்பத்தை இட்டுள்ளார்.

தீக்குளிப்பு
இந்தக் கடித்ததை எழுதி முடித்த மகேஸ்வரன், நள்ளிரவு ஒரு மணியளவில் திருப்பூர் பார்க் சாலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

2 உயிர் பலி
இதே கோரிக்கை வலியுறுத்தி ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த நீலவேந்தன் மற்றும் ராணி ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். ஆனாலும் இந்தக் கோரிக்கை பற்றி தமிழக அரசு இன்னும் வாயே திறக்கவில்லை என்ற நிலையில் இன்று மற்றொரு ஆதித்தமிழர் தொண்டர் தீக்குளித்துள்ளார்.

திமுக ஆட்சியில்..
திமுக ஆட்சியின் போது எஸ்.சி. பிரிவில் உள் ஒதுக்கீட்டை உருவாக்கி 3 சதவீத இடஒதுக்கீடு அருந்ததியருக்கு வழங்கப்பட்டது. இதனை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக தமிழகத்தில் அருந்ததியர் சமூகத்தினரால் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications