3,000 அடி உயர உச்சியில் கிரிவலம்- அப்படியே பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்த இளைஞர்-பதற வைக்கும் வீடியோ
முசிறியில் உள்ள தலைமலை கோயிலில் கிரிவலம் வந்தபோது 3000 அடி உயரத்திலிருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயிலில் கிரிவலம் வந்தபோது 3000 அடி உயரத்திலிருந்து இளைஞர் ஒருவர் விழும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த சிறப்பு பெற்ற வைணவ கோயிலாகும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் தலைமலை பெருமாளை வணங்க செல்லும் பக்தர்களின் நேர்த்தி கடன் மிகவும் சிறப்பம்சம் பெற்றதாகும். நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வந்தனர்.
நேற்று காலையில் கிரிவலம் வந்த இளைஞர் ஒருவர் 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். ஆபத்தான மலை பள்ளத்தில் விழுந்த இளைஞரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த எருமைப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தவறி விழுந்த இளைஞரை மீட்பதற்கு வனத்துறை, தீயணைப்புத் துறை ஆகியோரின் உதவியை போலீஸார் நாடியுள்ளனர். எனினும் அந்த இளைஞர் குறித்து அவரது குடும்பத்தார் யாரும் புகார் அளிக்காததால் அவரை மீட்பதில் சிக்கல் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
அந்த இளைஞர் தவறிவிழும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications