தமிழகத்துக்காக பாஜகவை தியாகம் செய்யலாமே.. இல. கணேசனுக்கு எதிராக இளைஞர்கள் கொந்தளிப்பு
நாடு நலம் பெற ஒரு மாநிலத்தை இழப்பதில் தவறில்லை என்று பாஜக எம்.பி இல.கணேசன் கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
சென்னை: பாஜக ராஜ்யசபா எம்.பி இல. கணேசன் தமிழகத்தை விட்டு வெளியேறலாம் என்று இளைஞர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். நாடு நலம் பெற ஒரு மாநிலத்தை இழப்பதில் தவறில்லை என்று பாஜக எம்.பி இல.கணேசன் கூறியதற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் பாஜகவைச் சேர்ந்த இல. கணேசன், பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த திட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருவது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும் மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும் என பாஜக எம்.பி.இல. கணேசன் நேற்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளைஞர்கள் ராஜ்யசபா பதவியை இல.கணேசன் தியாகம் செய்ய வேண்டும் என்றும் டுவிட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
|
புறக்கணிக்கிறோம்
தமிழகத்தின் பாதுகாப்பிற்காக பாஜக அரசை புறக்கணிக்கிறோம் என்று வலைத்தளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.
|
கட்சியை தியாகம் செய்கிறோம்
நாட்டுக்காக ஒரு மாநிலம் தியாகம் செய்வது தவறு இல்லை என்றால் ஒரு நாட்டுக்காக ஒரு கட்சியைத் தியாகம் செய்வதிலும் தவறில்லையே! என்று ஒரு வலைஞர் கேட்டுள்ளார்.
|
தமிழகத்தை அடகு வைப்பதா?
நாட்டு நலனுக்காக தமிழகத்தை அடகு வைப்பதாக என்றும் பலரும் கேட்டுள்ளனர். எந்த காரணத்திற்காகவும் தமிழகத்தை தியாகம் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.
|
தியாகம் செய்வார்
தமிழகத்தை தியாகம் செய்யச் சொல்லும் எம்.பி இல. கணேசன், தனது ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்வார் என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.
|
தியாகம் செய்வோம்
தமிழகத்தை தியாகம் செய்ய முடியாது... தமிழிசையை தியாகம் செய்வோம் என்று பதிவிட்டுள்ளனர் சில நெட்டிசன்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications