காப்பி ரைட் பிரச்சினை... விஜய்யின் தெறி டீசரை நீக்கி அதிர்ச்சி தந்த யுட்யூப்!
காப்புரிமை பிரச்சினை காரணமாக விஜய்யின் தெறி டீசரை, வெளியான 12 மணி நேரத்துக்குள் நீக்கி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது யு ட்யூப்.
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய 50-வது படம்.
தெறி படத்தின் டீசர் நேற்றிரவு வெளியிடப்பட்டது. விஜய் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் டீசரைப் பகிர்ந்து கொண்டாடினார்கள்.
இந்நிலையில் திடீரென இன்று காலை தெறி படத்தின் டீசரை யூடியூப் இணையத்தளம் நீக்கியது. காப்புரிமை தொடர்பாக எழுந்த சந்தேகத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘Theri - Official Teaser is no longer available due to a copyright claim by TamilTalkies' என்று யூடியூப் இதற்கு விளக்கம் அளித்திருந்தது.
அதாவது தெறி பட டீசருக்கு தமிழ் டாக்கீஸ் என்ற நிறுவனம் காப்பிரைட் பிரச்சினை எழுப்பியதால் டீசரை நிறுத்தியதாக யுட்யூப் தெரிவித்திருந்தது.
இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். யூடியூப் இணையத்தளத்துக்குத் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தார்கள்.
மீண்டும்...
இந்நிலையில், சில நிமிட இடைவெளிக்குப் பிறகு தெறி டீசரை மீண்டும் பதிவேற்றியது யுட்யூப்.
ஆனால் இந்த இடைப்பட்ட நேரத்தில் யுட்யூபுக்கு வந்த விஜய் ரசிகர்களின் கண்டனக் கடிதங்கள் சிலவற்றிலக் அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாசம் தெறித்ததாம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications