இப்படித்தான் பரவுகிறதாம் "ஜிக்கா" வைரஸ், கொசுக்கள் மூலம்.. மருந்தே கிடையாதாம்!
சென்னை: உலகை அச்சுறுத்தும் ஜிக்கா வைரஸுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஜிக்கா வைரஸ் ஏடீஸ் கொசுக்கள் மூலம் பரவி வருகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஜிக்கா வைரஸ் தற்போது 24 நாடுகளில் பரவியுள்ளது. அதில் தென் அமெரிக்க நாடான பிரேசலில் தான் அதிகமானோர் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களை பரப்பும் அதே வகை கொசுக்கள் மூலம் தான் ஜிக்கா வைரஸும் பரவுகிறது.

பரவுதல்
ஜிக்கா வைரஸ் பெரும்பாலும் கொசுக்கள் மூலம் தான் மனிதர்களிடையே பரவுகிறது. இந்த கொசுக்கள் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கட்டிடங்களை சுற்றி வாழ்கின்றன. ஏடீஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் தான் செயல்படுகின்றன.

கொசுக்கள்
ஏடீஸ் கொசுக்கள் அதிகாலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மனிதர்களை கடிக்கின்றன. ஜிக்கா வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவரின் ரத்தத்தை யாருக்காவது ஏற்றினால் அவரையும் வைரஸ் தாக்கும். ஜிக்கா வைரஸ் செக்ஸ் மூலமும் பரவுகிறது. மேலும் கர்ப்பிணியிடம் இருந்து குழந்தையை ஜிக்கா வைரஸ் தாக்குகிறது.

அறிகுறிகள்
ஜிக்கா வைரஸால் தாக்கப்பட்டவர்களில் 5ல் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படும். ஜிக்கா வைரஸால் காய்ச்சல், அரிப்பு, மூட்டு வலி, கண் சிவப்பாகுதல், தசை வலி, தலைவலி ஒரு வாரத்திற்கு இருக்கும். செரிமானப் பிரச்சனையும் ஏற்படும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும். ஜிக்கா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளும் டெங்கு, சிக்குன்குனியாவின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும்.

சிகிச்சை
ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஜிக்கா வைரஸ் தாக்கினால் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும், நிறைய நீர் குடிக்க வேண்டும், காய்ச்சலை கட்டுப்படுத்த மருந்து உட்கொள்ள வேண்டும்.

தடுப்பு முறைகள்
ஜிக்கா வைரஸ் பரவாமல் தடுக்க கொசுக்கள் அதிகரிப்பதை தடுக்க வேண்டும். கதவு, ஜன்னல்களை பூட்டி வைப்பதுடன் கொசுக்களை அழிக்கும் கிரீம்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும். ஜிக்கா வைரஸ் பரவும் இடங்களுக்கு பயணம் செய்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications