வீல் என்று கத்திய தீபா.. தெறித்து ஓடிய சிறுவன்.. சிக்கிய செல்லில் ஷாக் காட்சிகள்!
Recommended Video
தஞ்சை: தீபா குளிக்கும்போது ஒருத்தன் மறைஞ்சிருந்து அதை வீடியோ எடுத்திருக்கான்.. இந்த விஷயம் போலீஸ் வரை போய்விட்டது!
திருவையாறு பகுதியை சேர்ந்தவர் தீபா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 25 வயதாகிறது.. கல்யாணமாகி 2 குழந்தைகளுக்கும் தாயானவர்.

இவர் வீட்டில் தோட்டம் ஒன்று உள்ளது. அங்கிருக்கும் அடிபம்பில்தான் தினமும் மாலை நேரங்களில் குளிப்பது வழக்கம். ஆனால், தோட்டம் என்பதால், மொத்தமான மறைவிட பகுதி அது இல்லை என தெரிகிறது.
சம்பவத்தன்று மாலை 5 மணி அளவில், தீபா அடிபம்பு அருகே குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தீபா குளிப்பதை மறைந்திருந்து பார்த்து, தன் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தான்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா, கத்தி கூச்சலிடவும், அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். எனினும் அவன், அந்த பகுதியை சேர்ந்தவன் என்பதால், தீபாவுக்கு நன்கு தெரிந்தவன். அதனால் தீபா அவனிடமே சென்று இதை பற்றி கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன் தீபாவை மிரட்டியதாக தெரிகிறது. அதனால் திருவையாறு போலீஸ் ஸ்டேஷனில் தீபா புகார் செய்தார். தகவலறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் தீபா குளிப்பதை சிறுவன் செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்து திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அதன்பிறகு தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications