கும்பகோணத்தில் 25 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

கும்பகோணம்: பள்ளிகளை குறிவைக்கும் கொரோனா...பதறும் மாணவர்கள்!!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்- ஆசிரியர்கள் என மொத்தம் 119 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதனையடுத்து தமிழகத்தில் நாளை முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கும்பகோணத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 956 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் கொரோனா கால கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications