அமெரிக்க தேர்தல்.. களைகட்டியது கமலா ஹாரீஸ் சொந்த ஊர்.. வெற்றிக்காக அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜை
தஞ்சாவூர்: அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரில் உள்ள குல தெய்வம் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Recommended Video
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்.

குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரீஷின் தாய் சாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.

கமலா ஹாரிஸின் அம்மா வழி தாத்தா, மன்னார்குடியை சேர்ந்தவர். பைங்காநாடு கிராமத்தில் இருக்கும் துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர்தான் கமலா ஹாரிஸின் தாத்தா கோபாலன். கோபால் சிவில் சர்வீஸ் அதிகாரியாக ஆங்கிலேயர் காலத்திலேயே பணியாற்றி இருக்கிறார். இவர் அமெரிக்காவில் 1930க்கு பின் சென்று அங்கேயே குடியேறினார். இதன் மூலம்தான் கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் குடியேறினார்.

கமலா ஹாரிஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். கமலா ஹாரீஸ் வெற்றி பெறும் பட்சத்தில் நாட்டின் துணை அதிபராகும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுவார்.

இந்த நிலையில்தான், கமலா ஹாரிஸின் சொந்த ஊரான மன்னார்குடி அருகே துளசேந்திரபுரத்தில் உள்ள குல தெய்வமான அய்யனார் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. ஊர்க்காரர்களும், சொந்தக்காரர்களும் இந்த பூஜையில் பங்கேற்றனர். முன்னதாக கமலாவை வாழ்த்தி இந்த ஊரில், கட்அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications