தொடங்கிய மோடி.. ஆரம்பமே சர்ச்சை! தாம்பரம்-செங்கோட்டை ரயில் நிற்காதா? அதிராம்பட்டினம் மக்கள் கொதிப்பு
தஞ்சாவூர்: சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி பல்லாவரத்தில் நடைபெற்ற ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் - செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்த நிலையில், ரயில் நிறுத்தங்களில் அதிராம்பட்டினம் இடம்பெறவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, மாநில அமைச்சர்கள் எவ வேலு, அன்பரசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் - செங்கோட்டை அதிவேக விரைவு இரயில் சேவை மற்றும் திருத்துறைப்பூண்டியிலிருந்து புறப்படும் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி DEMU இரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7.25 மணிக்கு திருநெல்வேலிக்கும், செங்கோட்டைக்கு காலை 9.30 மணிக்கும் சென்றடையும்.

தாம்பரம் - செங்கோட்டை ரயில்: ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வாரம் ஒரு முறை இயக்கப்படும் இந்த ரயில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும். இந்த ரயிலின் சாதாரண படுக்கைக்கான டிக்கெட் விலை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு ரூ.405 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கெட் விலை ரூ.985 ஆகவும், 2 ஆம் வகுப்பு ஏசி கோச்சிற்கான கட்டணம் ரூ. 1,505-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சாதராண படுக்கைக்கான டிக்கெட் கட்டணம் ரூ.435, 3 ஆம் வகுப்பு ஏசி கோச் கட்டணம் ரூ.1,060, 2 ஆம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.1,620 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ரயில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

அதிராம்பட்டினத்தில் நிற்காது: ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்த ரயில் நிற்காது என்று தெற்கு ரயில்வே வெளியிட்டு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தைவிட குறைவான கிரேட் கொண்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கும்போது, தங்கள் பகுதி புறக்கணிக்கப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
இதனை தொடர்ந்து அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் தாஹிரா அம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 45,000 மக்கள் வாழும் அதிராம்பட்டினத்தில் தினசரி ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னைக்கு செல்லும் நிலையில் இங்கு ரயில் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெற்கு ரயில்வே தலைமை மேலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

ரயில் மறியல் போராட்டம்: இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பிரதமர் மோடி ரயில் சேவையை தொடங்கி வைத்து உள்ளார். இதற்கிடையே அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அமைப்பு அறிவித்து இருந்தது. இதற்கிடையே இன்று அதிராம்பட்டினம் வந்த தஞ்சாவூர் எம்பியும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை சந்தித்த சமூக ஆர்வலர்கள் அதிராம்பட்டினத்தில் தாம்பரம் - செங்கோட்டை ரயில் நின்று செல்ல ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
அதேபோல், நாகை இந்திய கம்யூனிஸ்டு எம்பி செல்வராஜ் மற்றும் ரயில்வே அதிகாரிகளின் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை தொடர்பான விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால் ரயில் மறியல் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவையினர், இதை நிறைவேற்றாவிட்டால் மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்துள்ளனர்.

-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications