அதிமுகவையும் அமமுகவையும் பிரித்து பார்க்காதீர்! எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன? தினகரன் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: அதிமுக - அமமுக இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டாம். அனைவரும் இணைந்து எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பயணித்தால் மட்டுமே அதிமுகவை பலப்படுத்த முடியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களுக்கு ஏன் பதவி கொடுக்கவில்லை என்பதையும் எடப்பாடி தன்னிடம் விளக்கியதாக தினகரன் தெரிவித்தார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்‌ தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி. ஆனால் அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அங்கு மாற்று திட்டம் கொண்டு வரப்பட வேண்டும், விவசாயம் சார்ந்த திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.

ttv Dinakaran ammk admk

மேலும் தற்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். செங்கோட்டையனை அடையாளம் காட்டியது அதிமுக. ஆனால் அதிமுக, மதிமுக நிலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணுவது - அழிய வேண்டும் என்று நினைப்பது என்பதெல்லாம் வன்மம் கொண்ட மனிதராக உள்ளார்.

முதல்வர் தூய சக்தி என்று சினிமா டைலாக் பேசி அரசியலுக்கு வந்தார். அவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? ஆட்சி அமைக்க வேண்டும் என்று சராசரியான மனிதரை விட இறங்கி, அமமுக வேட்பாளரிடம் காரில் அமர்ந்து கையெழுத்து வாங்கி உள்ளனர்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் மூன்று பைல் உள்ளது என மிரட்டுகிறார். இதற்கெல்லாம் திராவிட கட்சிகள் பயந்து விடாது. ஆட்சி அமைத்ததில் தில்லுமுல்லு. தவெகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள், அமமுக வேட்பாளர் கொண்டு ஆட்சி அமைத்துள்ளார்.

சிறந்த அரசியல் வில்லன் நடிகர் விஜய். அவருக்கு பாரத ரத்னா கொடுக்கலாம். அமைச்சர் ஆனந்தை தவிர தவெகவில் விசுவாசிகள் யாரும் இல்லை.
ஆதவ் அர்ஜீனா, அருண் ராஜ் எல்லோரும் பல கட்சிக்கு சென்றவர்கள். ஆறு சிலிண்டர் தருவதாக கூறி மூன்று சிலிண்டர் தருகிறார். அதையும் எதற்காக அடுத்த ஆண்டு பொங்கல் வரை தாமதப்படுத்த வேண்டும்?

படித்து விட்டு இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். ஆனால் நடத்துநர், ஓட்டுநர் பதவிக்கு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களை நியமிக்கிறார்கள்.

திராவிட ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு இருக்கலாம். ஆனால் வளர்ந்த மாநிலத்தில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. தற்போது அதளபாதாளத்தில் செல்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவர் தற்போது தவெகவில் இணைந்து திராவிட கட்சிக்கு எதிராக பேசுவது காலத்தின் கொடுமை.

அதிமுக - அமுமக இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டாம். கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களுக்கு மீண்டும் பதவி வழங்குவது சரியாக இருக்காது என எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் தெரிவித்தார்.

பொறுமையாக இருக்க வேண்டும் என கூறினார். அவருடைய கருத்து சரியானது என எனக்கு தோன்றுகிறது. அதிமுக அதிருப்தியாளர்கள் பொது வெளியில் கருத்து கூறுவது நம்மை பலவீனப்படுத்தும். எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து பயணித்தால் மட்டுமே கட்சி பலப்படும்.

தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வருவது என்று கூறுவது சிரிப்பாக உள்ளது. விஜய் தமிழில் தான் நடித்தார். மோடி 12 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
விஜய் முதலில் நிரூப்பிக்கட்டும். விஜய் சொல்வதை அவர் கட்சிக்காரர்களே கேட்பதில்லை.

ரீல் விட்டு ஆட்சி தொடரலாம் என நினைத்தால் தமிழக மக்கள் முடிவு கட்டி விடுவார்கள். 108 தான் மக்கள் கொடுத்தார்கள். ஆட்டுக்கு வால் அளந்து தான் கொடுத்தார்கள்.
ஆனால் கம்யூனிஸ்ட் போய் நீட்டி விட்டார்கள். மக்கள் 118 கொடுக்காத போது தெரிய வேண்டும்.

இது மக்களுக்கு கொடுமையான காலம்.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் என திமுக மீது என்ன குற்றச்சாட்டு வைத்தோமே அது தற்போது அதிக அளவு பரவி இருக்கிறது. தற்போது சூழலில் நான் சட்டமன்றத்திற்கு செல்லாமல் இருப்பது நன்மையாக பார்கிறேன். வரும் உள்ளாட்சி தேர்தலை NDA கூட்டணியோடு சந்திப்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+