அஜித்குமாரின் விடாமுயற்சி.. கும்பகோணத்தில் அதிகாலையே ரசிகர்கள் 'என்ன ஒரு சம்பவம்' .. பாருங்க
தஞ்சாவூர்: லைகா தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி - நடிகர் அஜித் குமார் கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி இருந்தது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1000 ஸ்கிரீனில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை காண்பதற்காக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்தனர். இதேபோல் பல ஊர்களில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். ஆரவாரத்துடன் படம் பார்த்து ரசித்து வருகிறார்கள்.
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மங்காத்தா படத்திற்குப் பிறகு நடிகை திரிஷா அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறார். நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்திருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் சிறப்பாக இருந்ததால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. லைகா தயாரித்திருந்த இந்த திரைப்படத்தை வெளியிடும் உரிமையை ரெட்ஜெயண்ட் மூவிஸ் வாங்கியிருந்தது. இப்படம் சுமார் 100 ஸ்கிரீனில் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 99 சதவீத தியேட்டரிலும் வெளியாகி உள்ளது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணிக்கு ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தியேட்டர்களில் முதல் காட்சி காலை 9மணிக்குத்தான் வெளியானது. ஆனால் பல திரையரங்குகளில் அதிகாலையிலேயே அஜித் ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் அதிகாலையிலேயே மிகப்பெரிய அளவில் குவிந்திருந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தியேட்டரே களைகட்டியிருந்தது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. பெங்களூரில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அங்குள்ள தியேட்டர்களில் 85 சதவீதம் அளவிற்கு விடாமுயற்சி புக்கிங் ஆகியுள்ளது. சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. பல தியேட்டர்களில் இன்று காட்சி ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. சனி, ஞாயிறு, மற்றும் செவ்வாய்கிழமை(தைபூசம்) விடுமுறை என்பதால் இந்த வாரம் விடாமுயற்சி நல்ல வசூலை ஈட்டும் என அஜித் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications