எப்படியாவது டாஸ்மாக் கடைகளை மூடிடுங்க! திமுக அரசை வலியுறுத்தி அமமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: அமமுக-வின் 4வது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் இன்று நடைபெற்று வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை மாவட்டம் மேலூரில் மாநாடு நடத்தி தொடங்கினார் டிடிவி தினகரன். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அமமுக, 5.46% வாக்குகளைப் பெற்றிருந்தது.

ttv dhinakaran ammk politics

அதன்பிறகு, 2021 சட்டசபை தேர்தலில் 2.36% வாக்குகளைப் பெற்றார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அமமுக 2 தொகுதிகளில் போட்டியிட்டது. தேனியில் டிடிவி தினகரன் உள்ளிட்ட அமமுகவின் 2 வேட்பாளர்களுமே தோல்வியைத் தழுவினர்.

அமமுகவில் முக்கிய நிர்வாகிகளாக இருந்த செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன், பி.பழனியப்பன் உள்ளிட்ட பலர் திமுகவுக்கு சென்றனர். மேலும் பல நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளுக்குத் தாவினர். இதனால் அமமுக பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இந்நிலையில், தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 4வது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், மாநில உரிமைகளை தாரைவார்க்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, ஜெயலலிதா பெயரிலான திட்டங்களின் பெயர்களை மாற்றி காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசை வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இரட்டை இலை சின்னம் உள்ளது என அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு காவடி தூக்கினால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவர் கட்சிக்கு முடிவுரை எழுதிவிடுவார். எடப்பாடி பழனிசாமி எங்களுடைய நிர்வாகிகள் சிலரை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார் என அண்மையில் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+