தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கம்பீரமாக காட்சியளித்த "என் பிள்ளைகளுக்கு" இந்த நிலையா?.. அதிர்ச்சியில் விவசாயி தற்கொலை

Google Oneindia Tamil News

Recommended Video

    தென்னை மரங்கள் விழுந்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை- வீடியோ

    தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் தென்னை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

    வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த வாரம் கரையை கடந்த போது டெல்டா மாவட்டங்களை ஒரு சுழற்று சுழற்றிவிட்டது. இந்நிலையில் அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெல், வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.

    ஏக்கர் கணக்கில் போட்ட பயிர்களும் சேதமாகி வீடுகளும் சேதமாகிய நிலையில் விவசாயிகளும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தரராஜ். இவரது தென்னை மரங்கள் முறிந்து விழுந்ததை கண்டு பெரும் சோகத்தில் இருந்தார்.

    கஜா புயல் நிவாரணம்.. முதல்கட்டமாக ரூ. 15,000 கோடி கேட்கிறது தமிழகம் கஜா புயல் நிவாரணம்.. முதல்கட்டமாக ரூ. 15,000 கோடி கேட்கிறது தமிழகம்

    பெரும் அதிர்ச்சி

    பெரும் அதிர்ச்சி

    இதை ஜீரணிக்க முடியாமல் சுந்தரராஜ் இன்று தற்கொலை செய்து கொண்டார். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது கஜா புயலின் கோரதாண்டவத்தால் விவசாயி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மோடி பார்வையிடவில்லை

    மோடி பார்வையிடவில்லை

    இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மோடி பார்வையிடவில்லை.

    கண்டனம்

    கண்டனம்

    விவசாயி சுந்தரராஜ் தற்கொலைக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் என்றார். அது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தற்கொலை கூடாது

    தற்கொலை கூடாது

    அவர் கூறுகையில் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ 1100 நிவாரணம் அறிவித்திருப்பது போதாது. விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    Farmer from Orathanadu commits suicide after coconut trees fall down because of Gaja cyclone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X