அந்தர்பல்டி அடித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்! வெற்றியை தட்டிச் சென்ற அதிமுக! கொதிக்கும் திமுக!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அடித்த அந்தர்பல்டியால் போட்டியின்றி ஒரு வார்டை பறிகொடுத்திருக்கிறது திமுக.
வேட்புமனுவை கடைசி நேரத்தில் வாபஸ் பெறுவதற்காகவோ போராடி சீட் பெற்றீர்கள் என, கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளூர் திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே வேட்புமனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் முடிந்ததால் கும்பகோணம் 7-வது வார்டில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

திமுக கூட்டணி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிடம் போராடி சீட் பெற்று காங்கிரஸ் உட்பட அதன் தோழமைக் கட்சிகள் பல இடங்களில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றன. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாரதி என்பவர் 7-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்து அது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் கடைசி நாளான நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் வேட்புமனுவை திடீர் திருப்பமாக வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாரதி அடித்த அந்தர்பல்டியால் கும்பகோணம் மாநகராட்சியின் 7-வது வார்டை அதிமுகவிடம் பறிகொடுக்கும் நிலை திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் திமுக நிர்வாகிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மீதும் அவருக்காக வாதாடி பேசி சீட் பெற்றுக்கொடுத்த கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மீது கோபத்திலும், அதிருப்தியிலும் இருக்கின்றனர். அநாவசியமாக போட்டியின்றி ஒரு வார்டு பறிபோனதை திமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தேர்தல் பணிகள்
வேட்புமனு தாக்கல் செய்யவும், வாபஸ் பெறவும் கால அவகாசம் நிறைவு பெற்றுவிட்டதால் திமுக சார்பில் வேறு வேட்பாளரை நிறுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கும்பகோணம் தொகுதியில் திமுக சார்பில் சாக்கோட்டை அன்பழகன் என்பவர் தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இதனிடையே மற்ற வார்டுகளில் திமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

என்ன காரணம்
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாரதி தனது வேட்புமனுவை கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டதற்கான காரணம் குறித்த விவரம் எதுவும் இல்லை. இவரது பின்னணியில் அதிமுகவினர் உள்ளார்களா என திமுகவினர் ஆராய்ந்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications