தஞ்சாவூர் : கூலி தொழிலாளியின் கண்ணை கட்டி காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய நால்வர் கைது
பாபநாசம் அருகே கூலி தொழிலாளியை தாக்கிய வழக்கில் நான்கு பேரை அம்மாபேட்டை காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: பணம் திருடியதாக இளைஞர் ஒருவரின் கண்ணைக் கட்டி காட்டு மிராண்டித்தனமாக தாக்கியதாக நான்கு பேரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாபநாசம் தாலுகா பூண்டி மேலத் தெரு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்வரின் மகன் ராகுல், 22 கூலித் தொழில் செய்து வருகிறார். பணத்தை திருடிவிட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல், ராகுலை இழுத்துச் சென்று துண்டால் கண்களை கட்டிவைத்து ராகுலின் பின்புறம் பிரம்பால் சரமாரியாகத் தாக்கினார்கள்.

ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த ராகுல், அண்ணா.. வேணாம் அண்ணா.. இனிமே எடுக்க மாட்டேண்ணே.. கொடுத்து விடுகிறேன். பிளீஸ் அடிக்காதீங்க எனக் கெஞ்சுகிறார். ஆனால் இரக்கம் காட்டாத அந்த கும்பல், தொடர்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த ராகுல் மயக்கமடைந்து அந்த இடத்திலேயே சரிந்தார். ஆத்திரம் தீராத அந்த கும்பல் மயக்கநிலையில் இருந்த ராகுலை மேலும் தாக்கியுள்ளனர். இந்த காட்சியை அந்த கும்பலில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர்கள் கடுமையாகத் தாக்கியதில் துடிதுடித்து மயக்கம் அடைந்து சரிந்த கூலி தொழிலாளி வலி பொறுக்க முடியாமல் எலி மருந்து சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அம்மாபேட்டை காவல்நிலைய போலீசார், நான்கு பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளதாக அம்மாபேட்டை காவல்நிலைய துணை கண்காணிப்பாளர் ஜி. ஆனந்த் கூறியுள்ளார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications