சென்னை, கோவை லெவலுக்கு மாறும் கும்பகோணம்.. வருகிறது டெல்டாவின் மிகப்பெரிய 'பிரீமியர் மால்'!

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கோவில் நகரமான கும்பகோணத்தில் விரைவில் மிகப்பெரிய மால் ஒன்று திறக்கப்பட உள்ளது. இது டெல்டாவின் மிகப்பெரிய மால் ஆக அமைய உள்ளது.

தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீக மற்றும் வரலாற்று நகரமாக கும்பகோணம் விளங்குகிறது. கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இவ்வளவு சிறப்புகள் கொண்ட கும்பகோணத்தில், சென்னை, கோவை, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் இருப்பது போல ஒரு பெரிய ஷாப்பிங் மால் இல்லை என்ற ஏக்கம் பொதுமக்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

kumbakonam thanjavur

அருகே உள்ள தஞ்சையில் மட்டுமே மால் உள்ளது. இதனால் பண்டிகைக் காலங்களில் துணிகள் வாங்கவோ அல்லது வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் சென்று பொழுதைக் கழிக்கவோ கும்பகோணம் மக்கள் தஞ்சாவூர் அல்லது திருச்சிக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், கும்பகோணத்தின் முதல் பிரம்மாண்ட வணிக வளாகமாக Kumbakonam Premier mall உருவாகியுள்ளது.

எங்கே அமைந்துள்ளது? எவ்வளவு பெரியது?

கும்பகோணத்தின் முக்கியப் பகுதியான செட்டிமண்டபம் பகுதியில், மயிலாடுதுறை சாலையில் இந்தப் பிரம்மாண்ட மால் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 4.3 லட்சம் சதுர அடி பரப்பளவில், 7 மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய கட்டடமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது கும்பகோணத்தின் முதல் மால் மட்டுமல்ல, ஒட்டுமொத்த காவிரி டெல்டா மண்டலத்திலேயே மிகப்பெரிய வணிக வளாகமாகவும் திகழ்கிறது. தஞ்சாவூர் லாங்வால் மாலை விட இது பெரியது ஆகும்.

சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இந்த மாலின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இதன் வெளிப்புற தோற்றம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் சர்வதேசத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கும்பகோணம் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

மாலில் என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளன?

பொதுவாக ஒரு மாலுக்குச் சென்றால் ஷாப்பிங், சினிமா, உணவு என அனைத்தும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். கும்பகோணம் பிரீமியர் மாலில் மக்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி பல நவீன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன:

இதுவரை பெரிய நகரங்களுக்குச் சென்று வாங்கி வந்த முன்னணி ஆடை நிறுவனங்கள் உதாரணமாக அடிடாஸ் போன்ற சர்வதேச மற்றும் தேசிய பிராண்டுகள், காலணிகள், கடிகாரங்கள், மேக்கப் ஸ்கின் கேர் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான பிரத்யேக ஷோரூம்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் நவீன ஃபேஷன் உடைகள் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கலாம்.

அதிநவீன ஒலி மற்றும் ஒளி அமைப்புகளைக் கொண்ட 'EPIQ' தொழில்நுட்பம் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இங்கே வர உள்ளன. PVR Inox / Vetri E-Square போன்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் இங்கு தியேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய திரைகளில், துல்லியமான சத்தத்துடன் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிப் படங்களை இனி கும்பகோணத்திலேயே கண்டு ரசிக்கலாம். சமீபத்தில் திரையரங்குப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்புகளும் வெளியாகி, திறப்பு விழா நெருங்கிவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த மாலின் மற்றுமொரு மிகப்பெரிய சிறப்பம்சம், இதன் வளாகத்திலேயே இணைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற லெமன் ட்ரீ நட்சத்திர ஹோட்டல் ஆகும். கும்பகோணத்திற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழிலதிபர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் சொகுசு அறைகள், மாநாட்டு அரங்குகள் உடற்பயிற்சி கூடம் மற்றும் கட்டடத்தின் உச்சியில் திறந்தவெளி நீச்சல் குளம் போன்ற வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

குடும்பத்துடன் வருபவர்கள் விதவிதமான உணவுகளை சாப்பிட பிரம்மாண்டமான ஃபுட் கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள் பாதுகாப்பாக விளையாடி மகிழ அதிநவீன கேமிங் Zone உருவாக்கப்பட்டுள்ளது. இது டெல்டாவின் மிகப்பெரிய மால் ஆக அமைய உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+