அரசு பள்ளி மாணவர்களுக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் போட்ட உத்தரவு.. ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் கட்டணம் எதுவும் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகளில் பல்வேறு கட்ட பணிகள் நடந்து வருகிறது. நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி ஒரு பக்கம் நடந்து வருகிறது. மறுபக்கம் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பள்ளி மற்றும் வகுப்பறைகளை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது,.

அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என கூறமுடியாது. அனைத்துப் பள்ளிகளிலும் கூடுதல் பொறுப்புடன் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே எத்தனை மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்ற முழு விவரத்தை தெரிவிப்போம்.

வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். சில பகுதிகளில் முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிட மாற்றமும் செய்திருக்கிறோம்.

do not collect any fees from govt school students: Minister Anbil Mahesh warns teachers

ஆசிரியர்களின் பல்வேறு வகையான கோரிக்கைகள், நிதி நிலைமைக்கேற்ப படிப்படியாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றும். அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் வகுப்புக்கு ஏற்கனவே ரூ.200 வசூல் செய்யப்பட்டது. தற்போது அந்தத் தொகையும் வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் எதற்காகவும் கட்டணம் வசூல் செய்யக் கூடாது. அதையும் மீறி வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+