தாறுமாறு தஞ்சாவூரு.. விரைவில் விமான சேவை! சென்னை, பெங்களூருக்கு அடுத்த மாதம் சல்லுன்னு பறக்கலாம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களிலே முதன்மை நகரமாக தஞ்சாவூர் திகழ்ந்து வருகிறது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணி, படிப்பு என பல்வேறு காரணங்களுக்காக தஞ்சைக்கு வந்து செல்கிறார்கள். அதேபோல் திருச்சி விமான நிலையத்துக்கு தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பயணிகளே அதிகளவில் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து உள்நாட்டு விமானங்களை இயக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் இந்த விமானப்படைத் தளம் அமைந்து உள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு இங்கிருந்து சென்னைக்கு வாயுதூத் விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை அதிகம் இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இதை விமானப் படை கையகப்படுத்தி 2012 முதல் முதன்மை விமானப்படை நிலையமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அருகில் உள்ள திருச்சியில் பன்னாட்டு விமான நிலையம் இருந்தாலும், டெல்டா மாவட்ட மக்களின் வசதிக்காக தஞ்சாவூரில் இருந்து பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில்தான் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டமைப்பு பணிகள் நடந்து முடிந்து உள்ளன.
இதனை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் தஞ்சாவூர் விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய பெரு நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 20 இருக்கைகளை கொண்ட சிறிய விமானங்கள் தஞ்சையில் இருந்து இயக்கப்பட இருக்கின்றன. இது தொடர்பாக ஏர்டாக்சி நிறுவனம் எந்தெந்த நகரங்களில் விமான சேவை தொடங்கப்படும் என்ற விபரத்தை வெளியிட்டு உள்ளது.
அதில் தஞ்சாவூரில் இருந்து பெங்களூர், தஞ்சாவூரில் இருந்து சென்னை, பெங்களூரில் இருந்து தஞ்சாவூர், சென்னையில் இருந்து தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. அதேபோன்று ராமநாதபுரம், வேலூர், நெய்வேலி ஆகிய நகரங்களுக்கும் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications