தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மழை, வெயில் தெரியாது.. உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மின் ஊழியர்கள்.. டெல்டா ஹீரோஸ்!

கஜா புயல் காரணமாக தமிழகம் முழுக்க மின் கம்பங்கள் அதிக அளவில் விழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: கஜா புயல் காரணமாக தமிழகம் முழுக்க மின் கம்பங்கள் அதிக அளவில் விழுந்துள்ளது. இதை சரி செய்ய மின்சார ஊழியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள்.

கஜா புயலால் தமிழகம் மொத்தமாக நிலைகுலைந்து போய் உள்ளது. 10 மாவட்டத்தில் மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு மின்சார கம்பங்கள்தான் அதிக அளவில் விழுந்து இருக்கிறது,.

[அப்பாடா.. 9 நாள் கழித்து வெளிச்சத்தை பார்த்து துள்ளி குதித்த மக்கள் ]

மின்கம்பங்கள்

மின்கம்பங்கள்

இந்த புயலில் நிறைய மின் கம்பங்கள் விழுந்துள்ளது. இதனால்தான் பல பகுதிகளுக்கு மின்சார வசதி கொடுக்க முடியாமல் மின்சார வாரியம் திணறி வருகிறது. வயல்கள், காடுகளின் வழியாக செல்லும் மின் கம்பங்கள் எல்லாம் மொத்தமாக விழுந்து இருக்கிறது.

எத்தனை விழுந்தது

எத்தனை விழுந்தது

சுமார் 1.80 லட்சம் மின் கம்பங்கள் இதனால் விழுந்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவிக்கிறது. இந்த மின்கம்பங்களை மீண்டும் மாற்றவே 200 கோடி ரூபாய் வரை ஆகும் என்றும் மின்சார வாரியம் தெரிவித்து இருக்கிறது. இது மட்டுமில்லாமல் பல இடங்களில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்து இருக்கிறது.

எப்படி வேலை செய்கிறார்கள்

எப்படி வேலை செய்கிறார்கள்

இந்த பெரும் சேதங்களை மின்சார ஊழியர்கள் மிக சிறப்பாக கையாண்டு சரி செய்து வருகிறார்கள். மழையில் கூட இவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள். பல மின்சார ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து மின் இணைப்புகளை சரி செய்கிறார்கள்.

முன்னாள் ஊழியர்கள்

முன்னாள் ஊழியர்கள்

இந்த பணிகளை இந்நாள் ஊழியர்கள் மட்டும் செய்யவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளை செய்ய சிலர் முன்னாள் மின்சார ஊழியர்களும் காசு, பணம் எதிர்பார்க்காமல் களமிறங்கி இருக்கிறார்கள். அதேபோல் வெளிமாவட்ட ஊழியர்கள் பலர் இதற்காக களமிறங்கி உள்ளனர்.

English summary
Gaja relief: The EB workers became heroes of Delta.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X