கொடுமை.. குழந்தைக்கு உடனே தங்க மோதிரம் கொடு.. கும்பகோணத்தில் செவிலியரை மண்வெட்டியால் தாக்கிய இளைஞர்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே முதல்வரின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் மோதிரம் தராததால் செவிலியர் மீது இளைஞர் ஒருவர் மண்வெட்டியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதையில் செவிலியர் அலமேலுவிடம் சென்?று தங்க மோதிரம் கேட்டு மதன் என்பவர் தகராறு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் மண்வெட்டியால் செவிலியரை தாக்கி இருக்கிறார்.

அண்மையில் மதுரையில் முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு தரப்பில் வழங்கப்படும் சீராக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இந்த தங்க மோதிரம் குழந்தை மருத்துவமனையில் இருந்து புறப்படும் நாளன்று, மருத்துவமனை நிர்வாகத்தால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Man Attacks Nurse

தமிழக அரசு சார்பாக குழந்தைகளுக்கு ஒரு கிராமில் தங்க மோதிரம் அணிவிக்கப்படுவது பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் குழந்தைகளை பெற்றுக் கொள்வதும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தால் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கும்பகோணம் அருகே பம்பப்படையூரைச் சேர்ந்த தம்பதி வனிதா - மதன். இவர்களுக்கு பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 16ஆம் தேதி 2வது குழந்தை பிறந்துள்ளது. இவர்களின் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்க வேண்டும் என்று மதன் கேட்டுள்ளார். அதற்கு செவிலியர் அலமேலு, மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தான் மோதிரம் வழங்கப்படும்.

ஆனால் மதன், குழந்தை பிறந்த 14ஆம் நாள் புண்ணிய தானம் செய்வதற்காக மோதிரம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் செவிலியர் அலமேலு மற்றும் மதன் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் செவிலியரை தாக்க மதன் முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த செவிலியரின் உறவினர்கள் மதனை தடுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மதன், மண் வெட்டியால் செவிலியர் மற்றும் உறவினர்களை தாக்கியுள்ளார். இதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் மதனை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+