சார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச வீடியோ காட்டுவாரு.. அதிர வைத்த சாரங்கபாணி!
பாலியல் தொல்லை தந்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
தஞ்சை: பொம்பளை பிள்ளைகளை தனியா கூட்டிட்டு போய், ஆபாச வீடியோ காட்டுவதுதான் அசிங்கம்பிடிச்ச வாத்தியார் சாரங்கபாணியின் ரெகுலர் வேலையே!
ஒரத்தநாடு அடுத்துள்ள ஊர் திருவோணம். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், ஆசிரியராக வேலை பார்ப்பவர்தான் சாரங்கபாணி. சங்கரன்கோவிலை சேர்ந்தவர். வயது 30 ஆகிறது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ , மாணவிகளுக்கு பாடம் எடுத்துவந்தார். இவர் மீது 3 மாதத்துக்கு முன்பு ஒரு பாலியல் புகார் வந்தது. புகார் அளித்தது, இவரிடம் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்தான்.

சாரங்கபாணி
ஆனால் அதிகாரிகளோ இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை என்றும், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு அரசு பள்ளிக்கு இவரை பெயரளவில் டிரான்ஸ்பர் செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், திரும்பவும் இதே திருவோணம் பள்ளிக்கு சாரங்கபாணி நேற்று வந்துவிட்டார். யாரை பிடிச்சு டிரான்ஸ்பர் வாங்கினாரோ தெரியவில்லை.. இதே ஆசிரியர் பள்ளிக்கு வந்துவிடவும் மாணவிகளுக்கு திக் திக் என்று ஆகிவிட்டது. பெற்றோர்களோ ஆத்திரம் வந்து பள்ளி முன்பு ராத்திரி 10 மணி வரை போராட்டமே நடத்தினர்.

ஆபாச படம்
போலீசார் பெற்றோர்களை சமாதானப்படுத்தினார்களே தவிர, பிரச்சனைக்கு விடை ஏதும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில்தான் துணிந்து ஒரு மாணவி புகார் தந்தாள். "சாரங்கபாணி சார், எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச படம் காட்டி தொல்லை பண்றாரு" என்று பரபரப்பு புகார் சொல்லவும் பட்டுக்கோட்டை மகளிர் போலீசார் இந்த விஷயத்தை கையில் எடுத்தனர். இப்போது, இந்த ஆபாச வாத்தியார் சாரங்கபாணி போக்சோவில் கைதாகி உள்ளார்.

விசாரணை
இதைதவிர, அந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கதுரை இன்னொரு புகார் தந்துள்ளார். தவறுகளை தட்டி கேட்டதால், சாரங்கபாணி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் கூறியுள்ளார். ஆக மொத்தம், 2 புகார்களில் போலீசார் தனித்தனி வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

புலம்பல்
"நம்பிதானே எங்க பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பறோம், இப்படி நாசம் செய்யலாமா? டிரான்ஸ்பர் கிடைத்த இவருக்கு திரும்பவும் அதே பள்ளியில் டிரான்ஸ்பர் யார் தந்தது? இந்த காமுகனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்" என்று பெற்றோர்கள் புலம்பி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications