கமல் மட்டுமில்லைங்க.. அவர் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றம்.. எச் ராஜாவின் வில்லங்க பேச்சு
Recommended Video
கும்பகோணம்: கமல்ஹாசன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா வில்லங்கமாக பேசியுள்ளார்.
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என தெரிவித்திருந்தார். இதையடுத்து கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இது போன்ற கருத்தை தான் ஏன் கூறினேன் என்பதற்கான விளக்கத்தை மதுரை மாவட்டம் தோப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் விளக்கினார். இந்த நிலையில் கமலுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.

கமல் கிறிஸ்டியன்
இந்த நிலையில் இதுகுறித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கமல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார்.

கிறிஸ்துவத்தை பரப்பிய கமல்
அவர் மட்டும் இல்லை. அவரது குடும்பத்தினரும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டனர். நான் கிறிஸ்துவ மதத்தை பரப்பி வருகிறேன் என கமலே ஒரு முறை கூறியிருந்தார்.

விஷமத்தை
இதை ஒவ்வொரு இந்துக்களும் புரிந்து கொண்டு கமலை புறக்கணிக்க வேண்டும் என எச் ராஜா தெரிவித்துள்ளார். எப்போதும் எச் ராஜாவுக்கு ஏதாவது விஷமத்தை பரப்புவதுதான் வேலை.

வாக்காளர் அடையாள அட்டை
முன்பு ஒரு முறை ஜிஎஸ்டி குறித்து வசனங்கள் இடம்பெற்றிருந்த விஜய் திரைப்படத்திற்கும் இது போல் சம்பந்தமே இல்லாமல் விஜயின் பெயர் ஜோசப் விஜய் என பொறிக்கப்பட்டிருந்த வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

சும்மா இருக்காத
இதையடுத்து விஜய் ரசிகர்களிடமும் நெட்டிசன்களிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார். தற்போது இதுபோல் கமல்ஹாசன் குறித்து சர்ச்சைக்குரிய தகவலை தெரிவித்துள்ளார் எச் ராஜா. இவரது வாய் சும்மாவே இருக்காது போலும்!.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications