தஞ்சையில் ஆசிரியை வீட்டில் 58 பவுன் தங்க நகைகள்.. ஸ்கெட்ச் போட்ட சுதாகர்.. தொக்காக சிக்கியது எப்படி?
தஞ்சை: தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வளர்மதி என்பவர் தஞ்சை மாநகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் 58 பவுன் தங்க நகைகள் அண்மையில் திருடு போனது. இந்த தங்க நகைகளை திருடிய உறவினர் எப்படி சிக்கினார் என்பது குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அடிக்கடி வந்து போனதால் சந்தேக வளையத்தில் சிக்கிய சுதாகர் என்ற உறவினரை அழைத்து விசாரித்தபோது உண்மை போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
தஞ்சை மாநகரம் பள்ளியக்ரஹாரம் மெயின்சாலையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வளர்மதி என்பவர் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை வளர்மதி, கடந்த ஏப்ரல் 1-ந் தேதி உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றாராம். பின்னர் வளர்மதி தனது வீட்டுக்கு வந்தார். பின்னர் தான் அணிந்து இருந்த நகைகளை கழற்றி ஒரு பையில் வைத்து பீரோவில் வைத்ததாக கூறப்படுகிறது.. அதே பீரோவில் உறவினர் ஒருவருடைய நிலத்தின் மூலப்பத்திரத்தையும் வளர்மதி வைத்துள்ளாராம். கடந்த ஏப்ரல் 2-ந்தேதி வளர்மதியின் வீட்டுக்கு வந்த உறவினர் தனது நிலப்பத்திரத்தை எடுத்து தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வளர்மதி தன்னுடன் பணியாற்றும் பணியாளர் ஒருவரை அனுப்பி உள்ளார். அங்கு வீட்டு அருகில் கடை வைத்திருக்கும் முதியவரிடம் சாவியை வாங்கி வீட்டை திறந்து, பத்திரத்தை எடுத்துக்கொடுத்து விடுமாறு கூறி உள்ளார். அதன்படி சாவியை வாங்கி வீட்டை திறந்து பத்திரத்தை அவர் எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு அன்றைய தினம் மாலையில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த வளர்மதி பீரோவில் நகைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? என பார்க்கவில்லை. இதற்கிடையில் பெங்களூருவில் இருந்து வீட்டுக்கு வந்த பாலசுப்பிரமணியன் அடகு வைப்பதற்காக பீரோவில் வைத்துள்ள நகைகளை எடுத்து வருமாறு வளர்மதியிடம் கூறியிருக்கிறார்.
அதன்படி பீரோவை திறந்து வளர்மதி பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த 58 பவுன் நகைகளை காணாமல் வளர்மதி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், நடந்த விவரத்தை தனது கணவரிடம் கூறினார்.
உடனடியாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்படி நகர டிஎஸ்பி சோமசுந்தரம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, தேசியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வளர்மதியின் வீடு இருக்கும் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வளர்மதியின் உறவினர் ஒருவர் சந்தேகப்படும்படி அங்கு நடந்து சென்றது தெரியவந்ததை கண்டுபிடித்தனர்.
இதன்படி அவரை போலீசார் அழைத்து விசாரித்தபோது, அவர் தஞ்சையை அடுத்த திட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சுதாகர் (39) என்பதும், இவர்தான் வளர்மதி வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த 58 பவுன் நகைகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 58 பவுன் நகைகளை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications