ஒரே ஒரு மீனு 17 ஆயிரம் ரூபாயா? அசர வைக்கும் கத்தாழை மீன்கள்! அப்படி என்னதான் ஸ்பெஷல்?
தஞ்சை: தஞ்சையில் முத்துப்பேட்டை மீன் மார்க்கெட்டில் 3 கிலோ எடை கொண்ட ஒரு கத்தாழை மீனின் விலை ரூ.17210க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீனுக்கு அதிகளவில் மருத்துவ குணம் உள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தொகுதி கடல் சார்ந்த பகுதி என்பதால் இங்கு நிறைய மீன்கள் கிடைக்கும். ஆசாத் நகர் மற்றும் பெரியக் கடைத் தெரு மீன் மார்கெட்களுக்கு பல்வேறு வகை மீன் வகைகள் விற்பனைக்கு வரும்.

இங்கு அலையாத்திகாடுகளும் இருக்கும். இதன் வேர்களில் உற்பத்தியாகி வளரக் கூடிய மீன் வகைகள் மிகவும் ருசியானதாக இருக்கும். இந்த பகுதியில் கொடுவா கெண்டை, வெள்ளாம்பொடி, கத்தாழை போன்ற மீன்கள் உற்பத்தியாகும்.
மேற்கண்ட மீன்கள் எல்லாம் பெரியக் கடை தெரு, ஆசாத் நகர் மீன் மார்க்கெட் பகுதியில் அதிக அளவில் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த வகை மீன்களை தவிர மற்ற வகை மீன்கள் எல்லாம் நாகை, கோடியக்கரை, மல்லிபட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து இங்கே விற்பனைக்கு கொண்டு வரப்படும். கத்தாழை மீன் ஒரு கிலோ ரூ 400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதிலும் கத்தாழை மீனின் ஆண் மீனில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. இதனால்தான் ஆண் மீன்களை வியாபாரிகள் அதிகளவில் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுப்பர். இங்கு சில மாதங்களுக்கு முன்பு 10 கிலோ எடை கொண்ட கத்தாழை மீன்கள் 3 கிடைத்தன. இது ரூ48,900 க்கு விலை போனது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில் நேற்ரு ஆசாத்நகர் மீன் மார்க்கெட்டுக்கு மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு கத்தாழை மீனை கொண்டு வந்து ஏலத்திற்கு வைத்திருந்தார். அவர் தொடக்க விலையாக ரூ 5000 சொன்னார். இதையடுத்து அந்த மீனுக்கு போட்டி அதிகரித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக ஏலத்தொகை ஏற்றிக் கொண்டே சென்ற நிலையில் அந்த மீன் ரூ 17,610 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மீனுக்கு இத்தனை விலையா என அந்த பகுதிக்கு மீன் வாங்க வந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தனர். இந்த மீன் ஏலம் விடப்பட்ட போது சிசிடிவியில் காட்சிகள் பதிவாகின. அந்த காட்சிகள் எல்லாம் சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த மீனின் விலை உயர்வுக்கு காரணமே அதன் வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற சதை பகுதிதான். இந்த நெட்டி பகுதியை மட்டும் எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். மீன்களுக்கு இந்த நெட்டிதான் மிதவை தன்மையை கொடுக்கும். இந்த மீன்கள் நெட்டி மூலம்தான் அதிக ஆபத்தை வெளிப்படுத்தும்.
இதில் ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் வேதிப் பொருள் இருக்கிறது. அது ஒயின், ஜெல்லி மிட்டாய், மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மீனை சேமித்து சேமித்து வைத்து தங்கம் போல் விலையை ஏற்றி ஏற்றி விற்பனை செய்வார்கள். ஒரு மீனின் வயிற்றில் இருந்து 100 கிராம் அளவுக்கு நெட்டி கிடைக்கும். இந்த மீன்கள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications