65 வயது ஆர்எஸ்எஸ் பிரமுகரை.. கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற.. பாஜக நிர்வாகி.. ஷாக்கில் கும்பகோணம்!
கும்பகோணத்தில் முதியவரை கொன்ற பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்
தஞ்சாவூர்: மடத்துக்கு சொந்தமான கடையை காலி செய்ய சொன்ன மேனேஜரை பாஜக நகர தலைவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஒரு பாஜக பிரமுகரே கொலையை செய்ததுதான் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
கும்பகோணத்தை சேர்ந்தவர் கோபாலன்... 65 வயதாகிறது.. ஆர்எஸ்எஸ் அமைப்பில் பொறுப்பில் இருந்தவர்.. பெங்களூருவில் உள்ள ஶ்ரீஶ்ரீ108 அபினவ உத்தராதி மடத்தின் மேனேஜராகவும் வேலை பார்த்து வந்தார். இந்த மடத்துக்கு கும்பகோணம், நாச்சியார்கோவில் பகுதியில் நிறைய சொத்துக்கள் உள்ளதால், இதை கோபாலன்தான் நிர்வகித்து வந்துள்ளார்.

இந்த மடத்துக்கு சொந்தமான கடையில் சரவணன் என்பவரும் தையல் கடை நடத்தி வந்தார்.. சரவணனுக்கு 43 வயதாகிறது.. நகர பாஜக தலைவராக உள்ளார். இவர் பல வருஷமாக வாடகையை செலுத்தாமல் இருந்துள்ளார்.. அதனால் கடையை காலி செய்யும்படி கோபாலன் சொல்லி உள்ளார்.. இதுதான் இவர்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்தது.
முதலில் 2 லட்சம் வாடகை பணத்தை தருகிறேன் என்றவர் நாளடைவில், "இது என் அப்பா வெச்ச கடை, ரொம்ப வருஷமா கடை வெச்சிருக்கோம். நீ கோர்ட்டுக்கு போனால்கூட கடை எங்களுக்குதான்" என்று சொல்லி உள்ளார். சரவணன் இப்படி சொல்லிவிட்டதால், கோபாலன் வேறு வழி தெரியாமல் கோர்ட் உதவியை நாடினார்.. கடைசியில் சரவணனை கடையை காலி செய்ய கோர்ட் சொல்லிவிட்டது.
இந்த உத்தரவையடுத்து, "கடையை காலி செய்தால் ரூ.2 லட்சம் தரேன்னு சொன்னீங்களே அந்த பணம் எங்கே" என்று கோபாலன் கேட்டார்.. அதற்கு சரவணன், "அது கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொன்னது, இப்பதான் தீர்ப்பு வந்துடுச்சே" என்று வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டு வாசலில் கோபாலன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கே வந்த சரவணன் திடீரென கத்தியால் கோபாலனை குத்திவிட்டு ஓடினார்.. இதில் சுருண்டு விழுந்து கோபாலன் இறந்துவிட்டார்.. இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், பாஜக நிர்வாகி சரவணனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக நிர்வாகி ஒரு கொலையை செய்தது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது!
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications