ஹய்யோ.. காப்பாத்துங்க.. ஓடும் காரில் நள்ளிரவில் தாலி கட்டிய இளைஞர்.. பெண்ணை மீட்ட போலீஸ்.. எப்படி?
இளம்பெண்ணை காரில் கடத்தி தாலி கட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்
தஞ்சாவூர்: இளம்பெண்ணை காரில் கடத்தியதுடன், நள்ளிரவில் ஓடும் காரிலேயே தாலி கட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்.. 32 வயதாகிறது.. படித்து விட்டு வேலைக்கு எங்கும் செல்லவில்லை..
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.
அப்போது அதே தெருவை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.. இருவரும் காதலிக்க தொடங்கினர்.. ஆனால், விக்னேஸ்வரனின் நடவடிக்கையில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்படவும், அவரது செயல் பிடிக்காமல் பழகுவதை தவிர்த்தார்.
இதனால் எரிச்சலடைந்த விக்னேஸ்வரன், அந்த பெண்ணை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.. சம்பவத்தன்றும் இதே பிரச்சனை இருவருக்குள்ளும் வெடித்துள்ளது.. அப்போது அந்த பெண், தன்னை சந்தித்து பேசுவதை இத்தோடு நிறுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார்..

டார்ச்சர்
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த விக்னேஸ்வரன், அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.. இது குறித்து பெண்ணின் பெற்றோர் ஏற்கனவே மயிலாடுதுறை போலீஸில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும், விக்னேஸ்வரனை அழைத்து கண்டித்தனர். அதற்கு விக்னேஸ்வரன், இனிமேல் அந்த பெண்ணை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று எழுதி தந்துவிட்டு போனாராம்.. அப்படி இருந்தும், விக்னேஸ்வரன் மீண்டும் வேலையை காட்டி உள்ளார்..

எஸ்கேப்
கடந்த 12-ந் தேதி அந்த பெண்ணை காரில் கடத்த முயன்றுள்ளார்.. இதனால் அதிர்ந்துபோன அந்த பெண், அங்கிருந்து தப்பித்து வந்து, மயிலாடுதுறை போலீஸில் மறுபடியும் புகார் செய்தார்.. ஆனால், அதற்குள் விக்னேஸ்வரன் தலைமறைவாகிவிட்டார். இதனால், அவரை போலீசாரும் வலைவீசி தேடிவந்தனர். தலைமறைவாக இருந்தபோதும், விக்னேஸ்வரன் திருந்தவில்லை.. மறுபடியும் அந்த பெண்ணை கடத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார்..

பயங்கர ஆயுதம்
இதற்கு உடந்தையாக நண்பர்களான செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்ட 14 பேரை தன்னுடன் சேர்த்து கொண்டார்... நேற்றிரவு, விக்னேஸ்வரன் மற்றும் நண்பர்கள் 14 பேர் என மொத்தம் 15 பேர் ஒரு கார், பைக்குகளில் கிளம்பினார்கள்.. அந்த வாகனங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர். அந்த பெண்ணின் வீட்டு வாசலில் கார், பைக்கை நிறுத்திவிட்டு வேகமாக வீட்டுக்குள் புகுந்தனர்... வீட்டிற்குள் பெண்ணும், அவரது அம்மாவும் இருந்தனர்.

ஐயோ.. காப்பாற்றுங்கள்
திடீரென அம்மாவை கீழே தள்ளிவிட்டு, அந்த பெண்ணை தரதரவென வெளியே இழுத்து வந்து, காரில் வலுகட்டாயமாக கடத்தினர்... அந்த பெண் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கத்தி கூச்சலிட்டார்.. அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் பெண்ணின் வாயை பொத்திவிட்டு, வேகமாக காரை எடுத்து கொண்டு தப்பினர். இது பற்றிய வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இதுகுறித்து பெண்ணின் தாய், மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், ஜீப்பில் அந்த காரை பின்தொடர்ந்தனர்..

தாலி கட்டினார்
ஆனால், வழியிலேயே விக்னேஸ்வரனுடன் வந்த 12 பேர் தப்பி விட்டனர்... விக்னேஸ்வரன், செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அந்த பெண் மட்டும் காரில் சென்று கொண்டிருந்தனர்... நள்ளிரவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கம்மியாம்குடியூரில் கார் சென்றபோது, திடீரென விக்னேஸ்வரன் அந்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பெண், என் வாழ்க்கையை இப்படி பாழாக்கிட்டியே என்று கதறி அழுதார்..

சேஸிங்
இதனிடையே, மயிலாடுதுறை போலீசார் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்... போலீசாரை பார்த்ததுமே விக்னேஸ்வரன் காரை வேகமாக ஓட்டினார்... ஆனாலும் போலீசார் பின்தொடர்ந்து சென்று காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த விக்னேஸ்வரன், சுகாஷ்சந்திரபோஸ், செல்வகுமார் மற்றும் அந்த பெண் ஆகிய 4 பேரையும் மீட்டு விக்கிரவாண்டி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

தாயிடம் ஒப்படைப்பு
பிறகு மயிலாடுதுறை போலீசாருக்கும் தகவல் தந்து வரவழைத்தனர்... இறுதியில், மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷனுக்கு 4 பேரும் அழைத்து செல்லப்பட்டனர்.. விக்னேஸ்வரன், செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்... தப்பி ஓடிய 12 பேரை தேடி வருகின்றனர்... பெண்ணை மீட்டு தாயிடமும் ஒப்படைத்துவிட்டு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறாரிகள்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications