கையில் மனுவோடு கால் கடுக்க காத்திருக்க வேண்டாம்! வீடு வீடாக கியூ.ஆர்.கோட் ஒட்டிய தஞ்சை மேயர்!
தஞ்சாவூர்: பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே தங்கள் புகார்களை மாநகராட்சிக்கு தெரிவிக்கும் வகையில் குடியிருப்புகளில் கியூ.ஆர்.கோட் ஒட்டும் பணிகள் தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 45 வார்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்ற தஞ்சை மேயர் சன் ராமநாதன், தனது கைப்படவே கியூ.ஆர்.கோட் ஸ்டிக்கரை ஒட்டியதோடு அது குறித்த விளக்கத்தையும் மக்களுக்கு அளித்தார்.

பலருக்கும் கியூ.ஆர்.கோட் என்றால் என்ன, எதற்காக வீட்டுக் கதவில் ஒட்டப்படுகிறது என்ற விவரம் புரியாமல் முழித்தனர். இதனைக் கவனித்த மேயர் சன்.ராமநாதன், கியூ.ஆர்.கோட் என்றால் என்ன, இதன் மூலம் எப்படி புகார்களை தெரிவிக்கலாம் என்பது பற்றியெல்லாம் பொறுமையாக விளக்கிக் கூறினார்.
அதுமட்டுமல்ல சொத்துவரி, குடிநீர் வரி கட்ட இனி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து அலைய வேண்டியதில்லை என்றும் இருந்த இடத்தில் இருந்தவாறே கியூ.ஆர்.கோடை அலைபேசி மூலம் ஸ்கேன் செய்து கட்டிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
மாநகராட்சிகளில் கியூ.ஆர்.கோட் சிஸ்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தும் பணிகள் அனைத்து மாநகராட்சிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதேபோல் அதிகாரிகளை பார்க்கவும், மேயரை பார்க்கவும் கையில் மனுவோடு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது என்பது இந்த கியூ.ஆர்.கோடின் சிறப்புகளில் ஒன்றாகும்.
தஞ்சை மாநகராட்சியை பொறுத்தவரை இந்த கியூ.ஆர்.கோட் ஸ்கேனிங் சிஸ்டம் பெண்கள், முதியோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் இந்த நடைமுறையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறார் மேயர் சன் ராமநாதன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications