என் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு
பெற்ற மகனை கட்டையால் அடித்து கொன்றுள்ளதாக அவரது தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

கும்பகோணம்: ஓவராக குடித்து விட்டு ஆட்டம் போட்ட மகனை விறகு கட்டையாலேயே விரட்டி விரட்டி அடித்து கொன்றுள்ளார் பெற்ற தாய் மாரியம்மாள். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகன் கருப்பையன். 40 வயதாகிறது. கல்யாணமாகி 2 குழந்தைகளும் உண்டு.
ஆனால் எப்பவுமே தண்ணி அடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களை அடித்து நொறுக்குவதுதான் இவரது தினசரி பொழப்பே. இதனால் இவரது தொல்லை தாங்காமல் செய்து வந்த அட்டூழியங்களை அனைவரும் பொறுத்து கொண்டு வந்தனர்.

2 குழந்தைகள்
ஒரு கட்டத்தில் கருப்பையனிடம் அடி தாங்க முடியாத மனைவி தன் குழந்தைகளை மாமியாரிடமே விட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு கோபித்து கொண்டு போய்விட்டார். இதனால் 2 குழந்தைகளையும் மாரியம்மாள்தான் கவனித்து வந்தார்.

விறகு கட்டை
இந்நிலையில் நேற்று ராத்திரியும் ஃபுல் போதையில் கருப்பையன் வீட்டிற்குள் நுழைந்து வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டார். பிறகு மாரியம்மாளை அடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாரியம்மாள் பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்து கருப்பையனை சரமாரியாக விளாசினார்.

உயிரிழந்தார்
இவ்வளவு நாள் இருந்த ஆத்திரத்தை எல்லாம் விறகு கட்டையாலேயே விரட்டி விரட்டி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த கருப்பையன் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

சரணடைந்தார்
இதனைத்தொடர்ந்து இன்று காலை மாரியம்மாள் திருவிடைமருதூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். "என் மகனை அடித்தே கொன்றுவிட்டேன்" என்று சொல்லி சரணடைந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கருப்பையா உடலை கைப்பற்றி தொடர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications