வர சொல்லிட்டு.. வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்! விஜய்யை அசிங்கப்படுத்திய கர்நாடகா! நயினார் காட்டம்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: முதலமைச்சர் விஜய்யை கர்நாடகாவுக்கு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் கூறிவிட்டு இப்போது வரவேண்டாம் சொன்னால் என்ன அர்த்தம் எனவும், இது முதலமைச்சரை இழிவுப்படுத்தும் செயல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக முதல்வர் சிவக்குமாரை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் அமைதி காக்கும் தமிழக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Nainar Nagendran Vijay Karnataka

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பனகல் கட்டிடம் அருகே நிறைவு பெற்றது‌.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், தமிழக பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம் உள்ளிட்ட மாநில - மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து கர்நாடகா அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், கர்நாடக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் வர வேண்டாம் என கூறுவது முதலமைச்சரை இழிவு படுத்துவதாக கருதுகிறேன். பேச்சுவார்த்தைக்கு வா என்று கூறிவிட்டு இப்போது வரவேண்டும் சொன்னால் என்ன அர்த்தம். இது முதலமைச்சரை இழிவுப்படுத்தும் செயல்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+