ஒரத்தநாடு அருகே விளையாடிய குழந்தைகளை தாக்கிய கணவன்.. தடுக்க வந்த மனைவி படுகொலை
தஞ்சை:ஒரத்தநாடு அருகே சாப்பிடும் போது விளையாடிய குழந்தைகளை தாக்க முற்பட்ட போது மனைவி தடுத்ததால் ஆத்திரமடைந்த கணவர், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழ உளுர் கிரமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் விவசாயி. அவரது மனைவி ரூபா. அவர்களுக்கு விஸ்வா (6)விஸ்வேஷ் (4) இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கும், அவரது மனைவி ரூபாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று மதியம் தனது குழந்தைகளுக்கு ரூபா சாப்பாடு கொடுத்து கொண்டிருந்தார். அப்போது குழந்தைகள் குறும்புத்தனமாக விளையாடியதை மணிகண்டன் தட்டி கேட்டு குழந்தைகளை தாக்கியுள்ளார்.
அதை தடுக்க வந்த மனைவி ரூபாவை வீட்டில் உள்ள அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரூபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஒரத்தநாடு போலீசார் ரூபாவின் சடலத்தை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். மணிகண்டனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications