புத்தாண்டு பார்ட்டி! ஜோடிகள் தோளோடு தோள் அணைத்தபடி பள்ளி முன்பு பேனர்கள்! கொதிக்கும் கல்வியாளர்கள்
தஞ்சை: ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் இணைந்து தோளோடு தோள் கைப்போட்டபடி புத்தாண்டு கொண்டாட்டம் நைட் பார்ட்டி என்று அச்சிடப்பட்டு பள்ளிக்கூடம் நுழைவு வாயில் முன்பு வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் கல்வியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் சாலையில் பிரபலமான கமலா சுப்ரமணியம் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளிக்கூடம் பிரதான நுழைவு வாயில் முன்பு ஆணும்,பெண்ணும் நெருக்கமாக ஒருவர் தோள் மீது ஒருவர் கைப் போட்டப்படி நைட் பார்ட்டி என ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் முன் பதிவுக்கான பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு உள்ளது.

நஞ்சை விதைக்கும் செயல்
இந்த பேனர் மாணவ, மாணவிகள் மனதில் நஞ்சை விதைப்பதாகவும், கலாச்சார சீரழிவை உருவாக்கும் வகையிலும் உள்ளதால் உடனடியாக இந்த பேனரை பள்ளிக்கூடம் நுழைவு வாயிலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்தினார்கள். நைட் பார்ட்டி பிளக்ஸ் பேனரில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது ஒரு ஜோடிக்கு 3500 ரூபாய் நுழைவுக் கட்டணம் என தெரிவித்தனர்.

கொல்கத்தா நகரம்
சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி இரவு நேர பார்ட்டிகள் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 31 ,ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் கடற்கரை சாலைகளில் உள்ள ரிசார்ட்களில் புக்கிங் நடைபெறும். இங்கு காதல் ஜோடிகள் ஜோடியாக வந்து தங்கி புத்தாண்டை இரவு முழுவதும் மதுவுடன் கொண்டாடி மகிழ்வர்.

பேக்கேஜ் முறைகள்
இதற்காக பேக்கேஜ் முறைகளும் செயல்படுத்தப்படுகின்றன. இன்னும் சில ரிசார்ட்களில் வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் திருமணமான ஜோடிகளை ஒருங்கிணைப்பர். இவர்களை பார்ட்டிகளுக்கு வரவழைத்து ஸ்வாப்பிங் செய்வர். அதாவது காரின் சாவிகளை ஒரு கூடையில் போட வேண்டும். ஒவ்வொரு ஆண் வந்து எந்த கார் சாவியை எடுக்கிறாரோ அந்த கார் சாவியின் உரிமையாளரின் மனைவியுடன் அவர் ஒரு நாள் இரவை கழிப்பார்.

கார் உரிமையாளர்
அது போல் இந்த கார் உரிமையாளர் வேறு ஒரு நபரின் மனைவியுடன் பொழுதை கழிப்பார். இப்படியாக முற்றிலும் மேலைநாட்டு கலாச்சாரத்தில் இந்த காலத்து இளைஞர்கள் ஊறி திளைத்துவிட்டார்கள். ஜாடிக்கேற்ற மூடி என்பதை போல் கணவரை போல் மனைவிகளும் இது போன்ற ஸ்வாப்பிங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.

மனைவி மாற்றுதல்
யாரோ ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸுக்கு செல்வதால்தான் அண்மையில் கேரளாவில் நடந்த ஒய்ஃப் ஸ்வாப்பிங் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கலாச்சாரம் சென்னையிலும் வந்துவிட்டது. கிழக்கு கடற்கரை சாலைகளில் இது போன்ற பார்ட்டிகள் நடத்தப்படுகிறது. திருமணாகாத காதல் ஜோடிகள் மது குடித்துவிட்டு ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம், கஞ்சா போதையில் திளைக்கும் போது பொதுமக்கள் போலீஸில் புகார் கொடுக்கும் நிலை ஏற்பட்டு ரெய்டு நடத்தப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரவு நேர விருந்தின் போது ஏற்பட்ட விபத்தில் நீச்சல் குளத்தில் விழுந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இறக்க நேரிட்டதால் இந்த இரவு பார்ட்டிகள் சென்னையில் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. பப்புகளும் இரவு 10 மணி வரை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications