எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் - தஞ்சாவூர் திமுக வேட்பாளர்: ஒரே தொகுதியில் 9வது முறையாக களமிறங்கும் வேட்பாளர்
தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
புதுக்கோட்டை, நாட்டாணியைச் சேர்ந்தவர் பழனிமாணிக்கம் (69). எம்.ஏ., எம்.எல்., படித்தவரான இவரது தொழிலே முழுநேர அரசியல் தான். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ஒன்பதாவது முறையாக தஞ்சை தொகுதியில் இவர் போட்டியிடுகிறார். இதில், 1996, 98, 99, 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல்களில் இவர் வெற்றி பெற்றார். 1984, 89, 1991 தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் பழனிமாணிக்கம். மாவட்டச் செயலாளராக இருந்ததால் தொகுதி முழுவதும் நன்கு அறியப்பட்டவர்.
கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த இவர், இம்முறை மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார தடையேதும் இல்லாத இவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் சென்னையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்று, ஆதரவு சேர்த்து வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றது. இதனால் கைவிட்டுப் போன தொகுதியை மீண்டும் திமுகவின் வெற்றிக் கோட்டையாக்குவாரா பழனிமாணிக்கம் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே உள்ளது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications