ஸ்மார்ட் போன் வாங்குங்கள்.. 1 கிலோ வெங்காயத்தை ஃப்ரீயா பெறுங்கள்.. அதுவும் "எஸ்.டி.ஆரிடம்" இருந்து!
Recommended Video
பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஸ்மார்ட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் கிடைக்கும் என அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக தங்கத்தை போல் மதிப்புமிக்கதாகிவிட்டது. ஒரு கிலோ வெங்காயம் கோயம்பேட்டில் ரூ 180-க்கு விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை ரூ 170-க்கு விற்கப்படுகிறது.
வடஇந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ 200 முதல் ரூ 250 வரை விற்கப்படுகிறது.

சம்பவங்கள்
வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தங்கம், வெள்ளியை காட்டிலும் வெங்காயத்தை மர்மநபர்கள் திருடும் சம்பவங்கள் நடந்தேறுகின்றன.

உற்பத்தி குறைவு
இந்த வெங்காய விலை உயர்வானது, உற்பத்தி குறைவு மற்றும் மழைப்பொழிவால் ஏற்பட்டுள்ளது. இன்னும் 45 நாட்களுக்கு விலை குறையாது என கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள்
இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் எஸ்டிஆர் மொபைல் கடை என்ற கடைவுள்ளது. இந்த கடையில் ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆபரை வழங்கியுள்ளது.

கடைகளில் கூட்டம்
ஸ்மார்ட் போன் வாங்கும் நபர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு ஸ்மார்ட் போனை ரூ 5000 கொடுத்து வாங்க தயாராகவே உள்ளனர். இதனால் இந்த கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

நோ ஆன்லைன்
ஆன்லைனில் போன் வாங்க முற்படும் தஞ்சை மாவட்ட மக்கள் இந்த கடையில் வாங்கினால் போன் கிடைப்பதுடன் அதைவிட காஸ்ட்லியான வெங்காயம் இலவசமாக கிடைக்கும் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் சிலரோ கிலோ 180 வெங்காயத்துக்கு ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதா. அதற்கு பதிலாக அந்த காசில் ஏராளமான வெங்காயத்தை வாங்கலாம் என்கின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications