Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.. விஜய்யை மீண்டும் அட்டாக் செய்த உதயநிதி

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: திமுகவை அழிப்பேன் என்று சொல்லி பல பேர் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லப் போவதில்லை. திமுகவை அழிக்க நினைப்பவங்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பாங்க. 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று தஞ்சையில் இன்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று தஞ்சையில் நடந்த மணமக்கள் காவியா - திலிபன் திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின், இருவரும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்றும், பிறக்கும் குழந்தைக்கு ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஒரு தமிழ்ப் பெயரை வைக்க ஒரு கோரிக்கை வைக்கிறேன் என்றும் கூறினார்.

thanjavur vijay udayanidhi stalin

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுகவை அழிப்பேன் என்று சொல்லி பல பேர் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் வெற்றியின் மூலம் பதில் சொல்லுவோம் என்றும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறினார். உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

இன்னைக்கு பல பேர் கிளம்பியிருக்கிறார்கள்.. திராவிட முன்னேற்ற கழகத்தை அழிப்பேன் என்று சொல்லி பல பேர் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லப் போவதில்லை. பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இதற்கு எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பதில் சொல்லுவார்கள்.

மேலும் திமுக தொண்டர்கள் எல்லாரும் உணர்ச்சிவசமாக, சந்தோஷமாக, உற்சாகமாக இருக்கிறார்கள். இந்த உற்சாகம் தான் எதிரிகளுக்கு எரிச்சலை தருகிறது. நாம் பெறும் தொடர் வெற்றி தான் அவர்களுக்கு எரிச்சலை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதிமுகவை எடுத்துக்கொண்டோம் என்றால் இப்போது பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கிறது.

இதனால் தனித்தனியாக நிற்கும் அதிமுகவினரும், யாருமே சீண்டாத பாஜகவும் எப்படியாவது திமுக கூட்டணியில் விரிசல் விழுந்துவிடாதா என்று துண்டு போட்டு காத்து கிடக்கிறார்கள். ஆனால் நம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது என்று நம்ம தலைவரும் சொல்லிட்டாங்க.. கூட்டணியில் இருக்கிற தலைவர்களும் அதில் தெளிவாக இருக்கிறார்கள்.

எனவே நாம் நம் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்னும் ஒன்றரை ஆண்டில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. கழகத்தின் முப்பெரும் விழாவில் பேசிய தலைவர் முதல்வர் ஸ்டாலின் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது தான் இலக்கு என்று கூறியிருக்கிறார். எனவே அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு வீடாக சென்று நம் கழக அரசின் சாதனைகளை, நம் திட்டங்களை சொல்ல வேண்டும்.

2026 ஆம் ஆண்டு தேர்தலில் கழகம் மீண்டும் வென்றது. 2வது முறையாக முதல்வர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். திமுக 7 வது முறையாக ஆட்சி அமைத்தது என்ற வரலாற்றை உருவாக்குவோம். அதற்கான உறுதியை இன்று இந்த தஞ்சை மண்ணில் ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எந்த திசையில் யார் வந்தாலும்.. வடக்கில் இருந்து வந்தாலும் சரி.. லோக்கலில் இருந்து வந்தாலும் சரி.. யாராக இருந்தாலும்.. எப்பேற்பட்ட கூட்டணி அமைத்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று பேசியிருந்தார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று சொல்லியிருந்தார்.

மேலும் விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டின் போது திமுக தான் தம் அரசியல் எதிரி என்றும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்று பேசியிருந்தார். திமுக மற்றும் பாஜகவை விமர்சித்து பேசிய விஜய், அதிமுகவை விமர்சித்து பேசவில்லை. திமுக தான் அரசியல் எதிரி என்று விஜய் பேசியதற்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+