புற்றுருவம்! 8 திசைக்கு காவல் தெய்வம்! தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது. இந்த கோயிலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 3ஆம் தேதி விக்னேஸ்வர பூஜைகளும் 4ஆம் தேதி நவக்கிரக ஹோமம், இதைத் தொடர்ந்து 5ஆம் தேதி மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. அது போல் 7 ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு மாலை திருக்குடங்கள் யாகசாலை எழுந்தருளுதல் செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து கடந்த சனிக்கிழமை 2ஆம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் மாலை 3ஆம் கால யாகசாலை பூஜைகள், நடைபெற்றன. இந்த நிலையில் நேற்று காலை 4ஆம் கால யாகசாலை பூஜையும் மாலை 5ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். இரவு மாரியம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
இந்த கும்பாபிஷேகத்தையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், இராமாபுரம் சரகம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் எட்டு திசைகளிலும் காவல்புரியும் அஷ்டசக்திகளுள் கீழ்திசையின்கண் புற்றுருவமாய் நின்று அருள்புரியும் சக்தி ஸ்தலம் என்றும், இத்திருக்கோவிலுக்கு திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் 10.02.2025 (திங்கட் கிழமை) அன்று நடைபெற உள்ளதால், மேற்படி திருக்குடமுழுக்கு விழாவை காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், முக்கிய பிரமுகர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாலும், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நடைபெறும் நாளான 10.02.2025 (திங்கட் கிழமை) அன்று தஞ்சாவூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, 22.02.2025 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications