கணவர் ம. நடராஜனின் 3-ம் ஆண்டு நினைவு நாள்- நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் முகாமிட்டிருக்கும் சசிகலா இன்று கணவர் ம.நடராஜனின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விளார் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

பெங்களூருவில் 4 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின்னர் சென்னையில் தங்கி இருந்தார் சசிகலா. தீவிர அரசியலில் ஈடுபடுவதாக முதலில் கூறியிருந்தார் சசிகலா. ஆனால் திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்தார்.

Sasikala Pays tribute to Husband M Natarajans 3rd death anniversary

இந்த நிலையில் சில நாட்களுக்கு ஒரு வார பயணமாக தஞ்சைக்கு வந்தார் சசிகலா. உறவினர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு ஆலய தரிசனம் செய்து வருகிறார் சசிகலா. ஶ்ரீரங்கம் கோவிலில் நேற்று வழிபாடு நடத்தினார். பின்னர் குலதெய்வ கோவிலில் கண்ணீருடன் பிராரத்தனை செய்தார் சசிகலா.

இதனிடையே இன்று சசிகலாவின் கணவர் ம. நடராஜனின் 3-ம் ஆண்டு நினைவு நாள். இதனால் விளார் கிராமத்தில் உள்ள நடராஜன் நினைவிடத்துக்கு இன்று காலை சென்றார் சசிகலா. அங்கு கணவரின் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார் சசிகலா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+