கை, கால்களில் காயத்துடன் கொள்ளையர்கள் கோர்ட்டில் ஆஜர்.. கழிவறையில் வழுக்கி விழுந்ததாக போலீஸ் தகவல்

Subscribe to Oneindia Tamil

சீர்காழி: சீர்காழியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பிடிபட்ட 3 கொள்ளையர்களும் கை, கால்களில் காயத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

Recommended Video

    சீர்காழி கொள்ளையன் என்கவுன்ட்டர்… போலீஸ் அதிரடி!

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (50). இவரது வீட்டுக்கு வந்த வடமாநில கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து கதவை பூட்டிவிட்டனர். அப்போது கூச்சலிட்ட தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டனர்.

    Sirkali twin murderers and Robberers were produced before Court

    இதையடுத்து தப்பியோடிய கொலையாளிகள் இருக்கூர் கிராமத்திற்கு அருகே இருந்த வயல்வெளிகளில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை கிராமமக்கள் பிடித்து வைத்திருந்தனர்.

    மணீஷ்பால் சிங், மணீஷ், ரமேஷ் ஆகிய 3 கொள்ளையர்களை பிடித்து வைத்திருந்தனர். அவர்களை கைது செய்த போது மணீஷ்பால் தப்பியோட முயன்றார். அப்போது அவர் மீது என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்தார். மற்ற இருவரை சிறையில் அடைத்தனர்.

    விசாரணையில் கும்பகோணத்தில் பதுங்கியிருந்த மற்றொரு கொள்ளையன் கருணாராமையும் கைது செய்தனர். இவர்கள் மூவரையும் சீர்காழியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களது கை, கால்களில் காயங்கள் இருந்தன.

    அவர்கள் மூவரும் கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+