Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில்... தப்பித்தவறி கூட ஓபனாக சிறுநீர் கழிக்காதீங்க.. ஒரே அசிங்கமாக போகும்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்துக்குள் நுழைந்தாலே துர்நாற்றம் வீசியதால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தஞ்சாவூர் மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வந்தது இந்நிலையில் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க கேமராவுடன் கூடிய ஒலி எழுப்பும் கருவி தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். சைரன் போன்ற சத்தத்துடன் விளக்குகள் எரிந்து காட்டிக்கொடுக்கும்..

டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய நகர் என்றால் அது தஞ்சாவூர் தான். புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, காரைக்கால் என பல பகுதி மக்களுக்கு முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் இருக்கிறது. 2004ம் ஆண்டு காலக்கட்டத்தில் எல்லாம் புறநகர் பகுதி என்கிற அளவில் தான் தஞ்சை புதிய பேருந்து நிலையம் இருந்தது. இப்போது அப்படி இல்லை.. மிகப்பெரிய அளவில் அந்த பகுதியும் வளர்ந்துவிட்டது.

thanjavur bus

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் பயணிகள் நடமாட்டத்துடன் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம். இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் தான் ஆம்னி பஸ் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் கட்டண கழிவறை, குளியலறை வசதிகள் இருக்கின்றன.

அரசு பேருந்துகள் செல்லும் பகுதியை பொறுத்தவரை மதுரை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகில் மட்டும் இலவச கழிவறை செயல்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் இலவச கழிவறைகள் இல்லை. இதனால் பேருந்து நிலையத்தில் பொதுவெளியில் ஆட்கள் சிறுநீர் கழிப்பது அதிகரித்தது. இதை தடுக்க பல முயற்சிகள் மாநகராட்சி தரப்பில் செய்யப்பட்டன. ஆனாலும் சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தாலே துர்நாற்றம் வீசுவது தொடர்ந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தஞ்சாவூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்காக முதல்கட்டமாக பஸ் நிலையத்தில் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கருவியை பொருத்தி இருக்கிறது. திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவுடன் இந்த சென்சார் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த கேமரா மற்றும் சென்சார் கருவி எப்படி வேலை செய்யும் என்றால், 50 அடி தூரத்திற்கு துல்லியமாக ஆட்களை அடையாளம் கண்டுவிடும். யாராவது சிறுநீர் கழிக்கும் நோக்கத்தில் இந்த கோடு அருகே வந்தால் அலாரம் ஒலிக்க தொடங்கி விடும். சைரன் போன்ற சத்தத்துடன் விளக்குகளும் எரியத்தொடங்கும். இதற்காக இரும்பு தகரத்தில் இரவு நேரத்தில் சைரன் போன்ற விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதுடன், இரும்பு தகரத்தில் இருந்து சில அடி தூரத்தில் கோடும் வரையப்பட்டுள்ளது.

சிறுநீர் கழிப்பதை தடுக்கவே இந்த அலாரம் ஒலிக்கும் என்பதால் யாரும் சிறுநீர் கழிக்க விரும்பமாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. யாராவது சிறுநீர் கழித்தால் தொடர்ந்து ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். 5 வினாடிகள் முதல் 10 வினாடிகள் வரை இந்த அலாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்கிறார்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+