இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தஞ்சை: தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் தமிழ் சேவா சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய கருத்துகள் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் நடைபெறுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குச் சாதிய பாகுபாடு இங்கே அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், பட்டியலினத்தவர்கள் சமைத்த உணவைச் சாட்டி மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை இன்னும் இருக்கிறது என்று தெரிவித்த அவர், கோயிலுக்கு அனுமதிக்க மறுப்பது, குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுகளைக் கலைப்பது போன்ற கொடுமைகள் நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகமாக இருக்கிறது என்றும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை அதிகம் நிலவுவதாகவும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த சம்பவங்களை வைத்துக் கொண்டு எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் ஆளுநர் பேசுவதை ஏற்க முடியாது என்று திமுக பேச்சாளர் சரவணன் இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications