முஸ்தபா.. முஸ்தபா.. மாநகராட்சி ஆணையர் பணி மாறுதல்! கண்கலங்கி அழுத தஞ்சை மேயர்! அரசியல் ஆபூர்வம்!
தஞ்சை: தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் கரூருக்கு பணிமாறுதல் பெற்று செல்லவுள்ள நிலையில் அவருக்கு நடந்த ஃபேர்வெல் விழாவில் கண்கலங்கி அழுதபடி பிரியாவிடை கொடுத்து அனுப்பியுள்ளார் தஞ்சை மேயர் சன்.ராமநாதன்.
இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா. பொதுவாக ஒரு ஸ்டிரிக்டான அதிகாரி இடம் மாறுதல் பெற்றுச் செல்கிறார் என்றால் அங்கிருக்கும் லோக்கல் அரசியல்வாதிகள் அப்பாடா தொலைந்தது சனியன் என்று தான் நினைத்து கொண்டாடுவார்கள். ஆனால் தஞ்சையில் நிகழ்ந்திருப்பதோ, அதிகாரிக்காக அரசியல்வாதி அழுதிருப்பது. இதனை தமிழக அரசியலின் ஆபூர்வ நிகழ்வு என்றே கூறலாம்.

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமாரை பொறுத்தவரை ரொம்ப ஸ்டிரிக்டான அதிகாரி என்ற பெயர் எடுத்தவர். ஒப்பந்தப்பணிகள் உட்பட மாநகராட்சி கடை வாடகை வரை மிகவும் கறாராக இருந்தவர். அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பேச்சுக்கே இடமளிக்காதவர். இப்படிப்பட்ட ஒரு அதிகாரி வேரு ஊருக்கு செல்கிறார் என்றால் அந்த ஊரைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் கொண்டாடுவது தான் வழக்கம்.
ஆனால் தஞ்சையில் நடந்திருப்பதோ அதற்கு நேர் மாறானதாக இருந்தது. இதிலிருந்தே எந்தளவுக்கு வெளிப்படையான நிர்வாகத்தை தஞ்சை மேயர் சன்.ராமநாதன் கொடுத்திருக்கிறார் என்பது புரிய வருகிறது. இதனிடையே இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சிறப்பு தகவல் என்னவென்றால் தமிழ்நாட்டிலேயே கடன் இல்லாத மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சியை மாற்றிய பெருமையும் ஆணையர் சரவணக்குமாருக்கு உண்டு.
அண்மையில் கூட தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த ரூ.27 கோடியை மாநகராட்சி பெயரில் வைப்பு நிதியாக செலுத்தியிருக்கிறார் சரவணக்குமார். தஞ்சையை போலவே கரூர் மாநகராட்சியிலும் சரவணக்குமார் இன்னும் பல அதிரடிகளை அரங்கேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக இதுவரை பள்ளிக்கூடங்களில் இருந்து இடம் மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை தான் மானவர்கள் பிரியாவிடை கொடுத்து அனுப்பியிருப்பதை பார்த்திருப்போம். முதல் முறையாக கறார் அதிகாரி ஒருவருக்கு அரசியல்வாதியான தஞ்சை மேயர் பிரியாவிடை கொடுத்து கண்கலங்கிய படி வழியனுப்பி வைத்ததை இப்போது தான் பார்க்கிறோம்.
மாநகராட்சி ஆனையராக சரவணக்குமார் தஞ்சையில் 2 ஆண்டுகள் 2 மாதம் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications