வீடியோ இருக்குதாம்.. தஞ்சை மாணவியை மதம் மாற சொல்லி கொடுமை என அண்ணாமலை கருத்து- போலீஸ் மீது விமர்சனம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மதமாற்ற பின்னணி இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இரண்டு வாரங்களுக்கு முன் பூச்சு மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று முதல்நாள் பலியானார். இந்த மாணவி பலியான விவகாரத்தில் ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாணவிக்கு ஹாஸ்டல் வார்டன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், அறைகளை சுத்தம் செய்ய சொல்லி கொடுமை படுத்தியதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.

மத மாற்றம்
அதே சமயம் அந்த மாணவியை மதம் மாற சொல்லி ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் தஞ்சாவூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி வார்டன் மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக தகவல் இல்லை, முதற்கட்ட விசாரணையில் இது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாணவியின் அடையாளங்களை வெளியிடுவது தவறு, என்று தஞ்சாவூர் எஸ்பி ராவலி ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாணவி
இந்த நிலையில் தஞ்சாவூர் +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மதமாற்ற பின்னணி இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை செய்துள்ள ட்வீட்டில், ஏழை விவசாயி மகள் (பெயர் நீக்கப்பட்டுள்ளது), வயது 17, அரியலூர் மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அண்ணாமலை கேள்வி
பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும். நடுநிலையான விசாரணை நடைபெற்று, தவறு செய்தவர், கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். மதமாற்றம் - தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி.

மத மாற்றம் புகார்
ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்! மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்! இந்த வழக்கில் முறையற்ற கருத்துக்களை தெரிவித்து தமிழ்நாடு போலீஸ் தனது நற்பெயரை கெடுத்துக்கொள்கிறது. அந்த மாணவி தான் மத மாற்றம் காரணமாக இப்படி செய்ததாக வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மாணவி வீடியோ
ஆனால் லோக்கல் போலீஸ் இந்த வழக்கை கஷ்டப்பட்டு திசை திருப்ப பார்க்கிறது. இதை விட வேறு என்ன ஆதாரம் தேவை?அந்த மாணவி வாக்குமூலம் கொடுத்த வீடியோ இருக்கிறது. எஸ்பி இந்த வீடியோ பொய்யானது என்று சொல்கிறாரா? எப்படி சொல்கிறார்? பெற்றோர்கள், மாணவியின் உறவினர் இதே விஷயத்தை தங்கள் வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளனர். அப்படி என்றால் மாணவியின் பெற்றோர் பொய் சொல்வதாக எஸ்பி கூறுகிறாரா? ரொம்ப வருத்தமாக இருக்கிறது மேடம்.. என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications