கும்பகோணத்தில் லாட்ஜில் மைனர் ஜோடி.. பதறி ஓடிவந்த மாணவர்.. திகைத்த தஞ்சாவூர்.. யாரந்த பரிதாப பெண்?

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: கல்லூரி மாணவி ஒருவரால், ஒட்டுமொத்த கும்பகோணமும் பதறிப்போய் விட்டது. இது தொடர்பாக விசாரணையை, கும்பகோணம் போலீசார் விரிவுபடுத்தி வருகிறார்கள்.

மதுக்கூரை சேர்ந்தவர் அந்த 17 வயது கல்லூரி மாணவி.. மன்னார்குடியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.. அதேபோல, மயிலாடுதுறை பூம்புகாரை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவர்.. இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசிஏ படித்து வருகிறார்.. இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவர்..
இவர்கள் கும்பகோணம் மோதிலால் தெருவிலுள்ள, லாட்ஜுக்கு நேற்று மதியம் 12 மணிக்கு வந்துள்ளனர்.. அந்த லாட்ஜிலேயே ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.. ரூமுக்குள் சென்ற கொஞ்ச நேரத்திலேயே, அந்த மாணவன் மட்டும் ரூமிலிருந்து பதறியடித்து கொண்டு வெளியே வந்துள்ளான்..

Tanjore Thanjavur Kumbakonam

அதிக ரத்தப்போக்கு: லாட்ஜில் இருந்தவர்களிடம், தன்னுடன் வந்த பெண்ணிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்யுங்கள் என்று பதறிக்கொண்டே கேட்டுள்ளார்.. இதனால் லாட்ஜ் நிர்வாகமும், ஆட்டோ ஒன்றினை வரவழைத்து, அந்த பெண்ணை ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. ஆனால் அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
பிறகு, அதன்படியே கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று சொல்லிவிட்டார்கள். இதைடுத்து, போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், பெண்ணின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்துவிட்டு, இவர்கள் தங்கியிருந்த லாட்ஜ் ரூமுக்குள் சென்று, இறந்த பெண்ணின் உடலிலுள்ள தடயங்களை சேகரித்தனர்.

நேரடி விசாரணை: இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆசிஸ் ராவத் நேரிலேயே சென்று ஆய்வு செய்து விசாரணையை துரிதப்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக வெளியான முதல் கட்ட விசாரணையில், 2 பேருமே கும்பகோணம் கோவிலுக்கு போவதற்காக திட்டமிட்டிருந்தார்களாம்.. ஆனால், கும்பகோணத்துக்கு பஸ்ஸில் வந்து இறங்கியதுமே, அந்த பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.. அதனால், குளித்துவிட்டு வேறு டிரஸ் மாற்றிக்கொள்வதற்காகவே ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள். அப்போதுதான் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொடுமை: எனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் இறப்பிற்கான உண்மை காரணம் தெரிய வரும் என்கிறார்கள். மைனர் ஜோடி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியபோது, இப்படியொரு சோகம் நடந்துள்ளது, பெண்ணின் குடும்பத்தினரை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+