"இன்னைக்கு ஒரு புடி".. 1000 கிடா.. தஞ்சையில் சாதி வேற்றுமை மறந்து.. ஒரு ஊருக்கே போடப்பட்ட விருந்து!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடைபெற்ற ஊர் திருவிழா ஒன்றில் மொத்த ஊருக்கும் கிடா வெட்டி விருந்து கொடுக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூரில் உள்ள தெத்துவாசல்பட்டியில் உள்ள ஊர் கோவிலில் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. 65 வருடமாக அங்கு திருவிழா நடத்தப்படாததால் மக்கள் சோகத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடமாக அங்கு திருவிழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கொரோனா
ஆனால் கொரோனா காரணமாக திருவிழா நடத்த தடை நிலவியது. இதையடுத்து கொரோனா முடிந்து இந்த வருடம் திருவிழா நடந்தது. இதற்காக ஊர் முழுக்க வீடு வாரியாக கட்டணம் வசூலிக்கப்பட்டது பிரம்மாண்டமாக திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பூஜை, சிறிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது போக விருந்துக்கும் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

1000 கிடா
1000 கிடா இதற்காக வெட்டப்பட்டு, பாரம்பரிய முறைப்படி குழம்பு, வறுவல் செய்யப்பட்டது. அதோடு ஸ்வீட், 3 சைட் டிஸ்கள் என்று பிரம்மாண்டமாக விருந்து தயார் செய்யப்பட்டது. இது ஊர் மக்கள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. அங்கு கிட்டத்தட்ட 1000 வீடுகள் உள்ளன. எல்லா வீடுகளுக்கும் உணவு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதற்காக பெரிய பந்தல் போடப்பட்டு விருந்து தரப்பட்டது.

ஒற்றுமை
ஆனால் இந்த பந்தலில் எல்லோரும் அமர முடியாது என்பதால் எல்லோரின் வீடுகளுக்கு முன்பும் ஆங்காங்கே பந்தல் போடப்பட்டது. இதிலும் மக்கள் ஒரே நேரத்தில் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டனர். வரிசையாக வேறுபாடு இன்றி மக்கள் அமர்ந்து சாப்பிட்டனர். ஏழை - பணக்காரன், இந்த சாதி - அந்த சாதி என்ற வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். கேட்க கேட்க எல்லோருக்கும் வயிறார உணவு போடப்பட்டது.

ஆயிரக்கணக்கில் மக்கள்
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் வரிசையில் அமர்ந்து இருக்க, அவ்வூர் இளைஞர்கள் ஜாதி வேற்றுமை மறந்து உணவு பரிமாறினார்கள். இதனால் கிராமமே நெகிழ்ச்சியாக காணப்பட்டது. 65 வருடம் கழித்து இந்த விழா நடைபெற்றது. இதனால் ஊர் பெரியவர்கள் பலர் நிம்மதி அடைந்தனர். பல வருடமாக இந்த ஆரோ திருவிழாவை பார்க்கவில்லை. ஒருவழியாக இந்த வருடம் நடத்திவிட்டனர் என்று ஊர் மக்கள் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications