தஞ்சாவூர் ஆகாஷ், மதுரை லாக்கப் மரணம்: தமிழகத்தை கேள்வி கேட்கும் டாக்டர் கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: மதுரை மற்றும் தஞ்சாவூர் சம்பவங்களை குறிப்பிட்டு, தமிழகத்தில் தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், தமிழக காவல் துறையின் செயல்பாடுகள் குறித்தும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. "காவல்துறையின் அத்துமீறல்களுக்கு முடிவில்லையா? முதல்வர் விஜய் அவர்களே" என்றும் கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.

மதுரையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி பரமசிவம் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Thanjavur Akash

மதுரை பூசாரி பரமசிவம்

மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் 55 வயதான கோயில் பூசாரி பரமசிவம்.. இவருக்கு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக பக்கத்து வீட்டினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.. இதன் காரணமாக சிந்தாமணி போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் பரமசிவத்தை தாக்கியதாக அவரது மனைவி அய்யம்மாள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பரமசிவம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில் பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார்.

லாக்கப் மரணம்

உயிரிழப்புக்கு முன்பு அவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவிலும் பரவி வருகிறது. அதில், போலீஸார் என்னை அடித்ததால் தான் என் உடல்நிலை மோசமடைந்தது; எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, சிந்தாமணி காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்கவில்லை.. பரமசிவம் மனைவி போலீசார் மீது தொடர்ந்து புகாரை கூறி வருகிறார்.. இந்த உயிரிழப்பு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமி

இந்த விவகாரத்தில் தவெக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "காவல்துறையின் அத்துமீறல்களுக்கு அளவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மதுரை சிந்தாமணி பூசாரி பரமசிவம் உயிரிழந்த செய்தி கவலையளிக்கிறது. வாகனம் நிறுத்துவது தொடர்பாக இரு வீட்டாரிடையே ஏற்பட்ட சிறு பிணக்கை விசாரிக்க அழைத்துச் சென்று பிணமாக்குவதா?

அதேபோல, கடந்த 17-08-2026 அன்று தஞ்சாவூரில் ஆகாஷ் என்ற இளைஞரைச் சாலையில் தாக்கி, கழுத்தை நெரித்துக் கைது செய்த அவலமும் அரங்கேறியுள்ளது. இதெல்லாம் நியாயமா.! தவெக அரசின் 100 நாள் சாதனைகளில் இதுவும் ஒன்றா? காவல்துறையின் அத்துமீறல்களுக்கு முடிவில்லையா? முதல்வர் விஜய் அவர்களே.. என்று கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தஞ்சாவூர் ஆகாஷ்

இதனிடையே, தஞ்சாவூர் ஆகாஷ் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.. நேற்று முன்தினம் தஞ்சாவூரில் விசிகவினர் நடத்திய சாலை மறியலின்போது, அந்த வழியாக பைக்கில் வந்த ஆகாஷ், போக்குவரத்து நெரிசல் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) ரஹீம், ஆகாஷின் கன்னத்தில் அறைந்ததால், ஆத்திரமடைந்த ஆகாஷ் பதிலுக்கு அதிகாரியின் கன்னத்தில் அறைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதைத் தொடர்ந்து, ஆகாஷ் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.. இந்நிலையில், இப்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். நல்லெண்ண அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+